கணவன் மனைவி உறவை வலுப்படுத்தும் முக்கியமான விஷயங்களில் ஒன்று திருப்தியான செக்ஸ் வாழ்க்கை. உடலுறவு வைத்துக்கொள்வதில் பல வகைகள் உள்ளன. இதில் ஓரல் செக்ஸ் ஒன்று. வாய்வழிப் புணர்ச்சி என்பது தான் ஓரல் செக்ஸ் என்று கூறப்படுகிறது. பலரும் ஓரல் செக்ஸை விரும்புவார்கள். ஆனால், ஓரல் செக்ஸ் என்று வரும் பொழுது, பிறப்பு உறுப்பு வழியாக தொற்று உள்ளிட்ட பாலியல் நோய்கள் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதால் ஆரோக்கியம் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டும். ஓரல் செக்ஸ் செய்பவர்கள் இந்த விஷயத்தையெல்லாம் கட்டாயமாக செய்யாதீர்கள்.
முதலில் உங்கள் பார்ட்னருக்கு விருப்பமா என்று கேளுங்கள் : ஓரல் செக்ஸ் என்பது அனைவரும் விரும்புவது அல்ல. கணவன் மனைவி இருவரில் ஒருவருக்கு மட்டுமே ஓரல் செக்ஸ் செய்வதற்கு விருப்பமாக இருக்கலாம். எனவே முதலில் ஓரல் செக்ஸில் கணவன் அல்லது மனைவிக்கு ஈடுபாடு இருக்கிறதா என்பது பற்றி கேளுங்கள். கணவன் அல்லது மனைவியை திருப்தியாக்க வேண்டும் என்று விரும்பினாலும், அவர்களுக்கு அது பிடிக்காமல் இருக்கலாம். எனவே நீங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் முன்பு, அவர்களுடைய விருப்பத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். இருவருக்குமே விருப்பமென்றால் ஓரல் செக்ஸ் பாலியல் உறவில் திருப்தியை கொடுக்கும்.
கட்டாயப்படுத்தாதீர்கள் : எந்தவகையான பாலியல் உறவாக இருந்தாலும் கட்டாயப்படுத்தக்கூடாது. கட்டாயப்படுத்தும் பொழுது அது உறவுக்குள் விரிசலை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பாலியல் உறவு திருப்தியாக இருக்காது. குறிப்பாக ஓரல் செக்ஸ் வேண்டும் என்று உங்கள் வாழ்க்கை துணையை கட்டாயப்படுத்தக் கூடாது. வலுக்கட்டாயமாக, வற்புறுத்தி ஓரல் செக்ஸில் ஈடுபட வைப்பது, தகாத வார்த்தைகளை சொல்வது மற்றவர்களை கஷ்டப்படுத்துவது ஆகியவை ஓரல் செக்ஸில் பிரச்சனையை தான் ஏற்படுத்தும்.
ஓரல் செக்ஸ் என்று ஃபோர்பிளேயை தவிர்க்காதீர்கள் : பொதுவாக பொதுவாகவே பாலியல் உறவுக்கு முன்பான முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது நெருக்கத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் பாலியல் உறவில் திருப்தியை கொடுக்கும். வழக்கமான உடலுறவுக்கு மட்டும் இல்லாமல் ஓரல் செக்சின் போது கூட முன் விளையாட்டுகளில் ஈடுபடுவது நல்லது.
சுத்தம், ஆரோக்கியம் மிகவும் அவசியம் : ஓரல் செக்ஸில் நேரடியாக பிறப்புறுப்புடன் தொடர்பு கொண்டால் உடலில் இருக்கும் திரவங்களால் அதில் பாதிப்புகள் ஏற்படலாம் உதாரணமாக விந்து, பிறப்புறுப்பில் இருந்து திரவங்கள் வெளி வருவது, சிறுநீர், உள்ளிட்டவை மூலம் நுண்கிருமிகளின் கேரியராக செயல்படலாம். எனவே உடலில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட இது காரணமாக அமையலாம். எனவே, ஓரல் செக்ஸில் ஈடுபடும்போது, உடலை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.