காதலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிப்ரவரி ஏழாம் தேதி ரோஜா தினம் என்று தொடங்கி பிப்ரவரி 14 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் நான்காவது நாள்தான் டெடி டே. பிப்ரவரி மாதம் முழுவதுமே காதல் மாதமாக அனுசரிக்கப்பட்டாலும், இந்த ஏழு நாட்கள் மிக மிக சிறப்பானவை.பொதுவாகவே பெண்களுக்கு டெடிபேர் பொம்மைகள் மிகவும் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை டெடிபேர் பொம்மையை மிகவும் விரும்புவார்கள். காதலிகளுக்கு டெடிபேர் பரிசாக கொடுப்பது ரொமான்ஸின் இன்னொரு அடையாளமாக கருதப்படுகிறது.
சரி, டெடி தினத்தன்று என்ன நிறத்தில் டெடியை பரிசாகக் கொடுக்கலாம் என்று இங்கே பார்க்கலாம் : காதலர் தினம் கொண்டாட்டத்தில், டெடி தினத்தன்று சிகப்பு நிற டெடி பேர் பொம்மையை காதலன் அல்லது காதலிக்கு பரிசாக வழங்கலாம். நீங்கள் காதலை தீவிரமாக நேசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் இருவருக்கும் உணர்ச்சி பூர்வமான ஒரு பிணைப்பு இருக்கிறது என்பதை குறிக்கிறது.