முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

காதலை கைவிடுவது பற்றி பலரும் வெளிப்படையாக பேசாமல் இருக்க முக்கிய காரணங்களாக இருப்பது சமூக தாக்கங்கள்

  • 18

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    காதலிக்கும் அனைவரும் காதலிப்பது எவ்வளவு பெரியது, காதல் அவர்களுக்குள் எப்படிபட்ட உணர்வுகளை ஏற்படுத்துகிறது என்பதை பற்றி காதலிப்பவரிடம் வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனால் சில காரணங்களால் காதலிக்கும் நபரை பிரிய நினைப்பது பற்றியும், அந்த காதலில் இருந்து பிரிய நினைப்பதை பற்றியும் வெளிப்படையாக பேசுவது மிக சிலரே.

    MORE
    GALLERIES

  • 28

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    காதலை கைவிடுவது பற்றி பலரும் வெளிப்படையாக பேசாமல் இருக்க முக்கிய காரணங்களாக இருப்பது சமூக தாக்கங்கள்,குற்ற உணர்வுகள் மற்றும் ஒருவருடன் காதல் உறவில் இருந்து விட்டு அதிலிருந்து வெளியேறுவதாக கூறுவதால் ஏற்படும் அவமானம் உள்ளிட்டவை. இதன் காரணமாக காதல் உறவிலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவர் நேரடியாக அதை சொல்லாமல் இருந்தால் அதை அடையாளம் காண்பது கடினமான ஒரு விஷயம். எனினும் ஒருவரது காதலன் அல்லது காதலி உறவிலிருந்து விலக நினைக்கிறார் அல்லது அவ்வப்போது அந்த எண்ணம் அவருக்கு எழுகிறது என்பதை அவர் அறிந்து கொள்வதற்கான நுட்பமான சில அறிகுறிகளை பார்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 38

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    சிறிய சண்டைகள் : காதலில் இருக்கும் இருவரும் ஒருவருக்கொருவர் நன்றாக பேசி கொள்கிறார்கள் என்றால் அந்த சூழலில் தங்களுக்காக சிறிது இடம் தேவை என்ற எண்ணத்தை அவர்கள் எளிதாக தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள முடியும். ஆனால் அவர்களிடையே எப்போதும் இந்த நிலை இல்லை, இருவரில் ஒருவர் மட்டுமே உறவை ஆக்கிரமிப்பு செய்யும் குணமுள்ளவர் என்றால், மற்றவருக்கு அது காதல் உறவில் சிக்கலை ஏற்படுத்தும். காதல் வாழ்க்கையில் தங்களுக்கான இடம் கிடைக்கவில்லை என்பதற்காக தனது பார்ட்னரை விட்டு பிரிவதற்கு அவர்கள் சிறிய விஷயங்களுக்காக கூட சண்டை போடுவார்கள். இது சரியான வழி இதுவல்ல என்றாலும், இந்த காதல் நமக்கு சரிப்பட்டு வரத்து என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால் அதை செய்து முடிக்க சின்ன சின்ன விஷயங்களுக்காக கூட சண்டையிடுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 48

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    வேலையில் மூழ்குவது : வழக்கமாக நீங்கள் சந்திக்கும் நேரத்தை தவிர்ப்பதற்காக நீங்கள் காதலிக்கும் நபர் அலுவலக நேரம் தாண்டியும் கூட வேலை வேலை என்று அதன் பின்னால் ஓடிக்கொண்டிருந்தால் அவர் உங்களை விட்டு பிரிவதற்கான வாய்ப்பை தேடி கொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அலுவலகத்தில் வேலைகள் கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நீங்கள் நினைப்பது தவறாக கூட இருக்கலாம். எனவே சட்டென்று ஒரு முடிவுக்கு வந்துவிட கூடாது. இருப்பினும் பல நாட்களுக்கு இது தொடர்ந்தால் இருவரும் மீட் செய்து இது குறித்து பேசி உங்கள் இருவரின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்த முயற்சிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 58

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    கால் மற்றும் மெசேஜ்களுக்கு பதிலளிக்க அதிக நேரம் : முன்பு குறிப்பிட்ட படி பெரும்பாலும் காதல் உறவில் இருக்கும் ஒருவர் அதிலிருந்து வெளியேற நினைப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது உறவில் அவருக்கான ஸ்பேஸ் கிடைக்காமல் போவதே. தன் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாவிட்டால் பார்ட்னருடன் பேச மற்றொருவர் அதிக ஈடுபாடு காட்டமாட்டார். அதற்கான அறிகுறிகள் தான் கால் அல்லது மெசேஜ்களுக்கு லேட்டாக பதில் அளிப்பது. இது நீண்ட காலத்திற்கு தொடர்ந்தால், அவர்களுக்கு என்ன பிரச்னை என்று கேட்டு அதற்கேற்றவாறு நீங்கள் உங்கள் நடவடிக்கைகளை மாற்றி கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 68

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    உடல் தொடர்பை குறைத்து கொள்வது : ஆரோக்கியமான காதல் உறவில் நிச்சயம் கட்டிப்பிடிப்பது, முத்தம் கொடுத்து கொள்வது, அரவணைப்பது, கைகோர்த்து நடப்பது போன்ற உடல் தொடர்பு முக்கியமான ஒன்றாக இருக்கும். ஆனால் ஒருவர் காதலில் இருந்து வெளியேற முடிவெடுத்துவிட்டால் அவரது பார்ட்னருடனான மேற்கண்ட உடல் தொடர்பை வெகுவாக குறைத்து கொள்வார் அல்லது முற்றிலும் தவிர்த்து விடுவார்.

    MORE
    GALLERIES

  • 78

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    வழக்கத்திற்கு மாறாக : காதலில் விரிசல் ஏற்படுவதில் உடல் ரீதியான தொடர்பில் பின்வாங்குவதை போல உணர்ச்சி ரீதியான அறிகுறிகளையும் சிலர் வெளிப்படுத்துவார்கள். எப்போதும் உங்களுடன் சகஜமாக சிறிது பேசி கொண்டிருக்கும் பார்ட்னர், வழக்கத்திற்கு மாறாக உங்களிடம் எதுவுமே பேசாமல் அமைதியாக இருப்பது, கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளிப்பது உள்ளிட்ட செயல்களை தொடர்ந்தால் இருவரும் உட்கார்ந்து என்ன பிரச்னை என்று பேசி தீர்ப்பது அவசியமாகிறது.

    MORE
    GALLERIES

  • 88

    துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

    முன்னுரிமை இல்லை : நீங்கள் காதலிக்கும் நபர் உங்களை விட்டு விலக நினைத்தால் உங்களுக்கு கொடுத்து வந்த முன்னுரிமையை நிறுத்தி கொள்வார்கள். முற்றிலுமாக உங்களை விட்டு விலகவோ அல்லது உங்களுடன் குறைந்த நேரத்தையோ செலவிடுவார்கள். உங்களை தவிர்த்து அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் மிகவும் பிஸியாக இருக்க துவங்கலாம்.

    MORE
    GALLERIES