பொதுவாகவே இன்ட்ரோவெர்ட் (Introvert) என அழைக்கப்படும் உள்முக சிந்தனையாளர்களை பற்றி பலருக்கும் பல்வேறு வித எண்ணங்கள் உண்டு. அவர்கள் இயல்பாகவே அமைதியானவர்களாக, எதிலும் நாட்டம் இல்லாத ஒருவரை போல் இருந்தாலும், வாழ்வின் சிறு நிகழ்ச்சிகளையும், சந்தோஷங்களையும் அவர்கள் அனுபவிக்க தவறுவதில்லை. மேலும் வெளி உலகத்திற்கு தெரிவது போல் அவர்கள் அமைதியானவர்களாகவும் ஒன்றும் தெரியாதது போல் இருந்தாலும் உண்மையிலேயே அவர்கள் தன்னை சுற்றியுள்ள அனைத்தையும் நன்றாக புரிந்து கொண்டு அவற்றை அனுபவிக்கும் மனநிலையிலேயே இருக்கின்றனர்.
திட்டங்கள் கிடையாது : உள்முக சிந்தனையாளர்கள் பொதுவாகவே தனக்குத் துணையாக யாரும் இல்லாமல் தனியாக இருக்கும்போது மிகவும் மகிழ்வாக உணர்வார்கள். முக்கியமாக காலையில் எழுந்ததும், எங்கேனும் வெளியே செல்ல வேண்டிய திட்டமோ அல்லது மாலை வேலைகளில் எந்த ஒரு திட்டமும் இன்றி தனியாக இஷ்டம் போல் பொழுதை கழிப்பதே அவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரும்.
ஷாப்பிங் நேரத்தில் யாருக்கும் இடமில்லை : அவர்கள் ஷாப்பிங் சென்றால் எப்போதும் மற்றவர்களுடைய துணையே நாடுவதில்லை. முக்கியமாக அங்கிருக்கும் விற்பனையாளர் இவர்களை பின் தொடர்வதையும் அல்லது தேவையற்ற பேச்சுக்களை வளர்ப்பதையும் இவர்கள் விரும்புவதில்லை. ஷாப்பிங் செல்லும்போது தனியாக ஷாப்பிங் செய்தால் இவர்கள் மிகவும் ரிலாக்ஸாக உணர்வார்கள்.
உணவகங்களில் உணவு உட்கொள்வது : இரவு உணவுக்கு மற்றவர்கள் வீடுகளுக்கு சென்று உணவருந்துவதை விட உணவகங்களில் இரவு உணவை உட்கொள்ள இவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஒருவேளை உணவு சரியாக இல்லை என்றால் உணவகங்களில் மிக எளிதாக அதனை மாற்றிக் கொள்ளலாம் இதுவே மற்றவர்கள் வீடு என்றால் அவ்வாறு செய்ய முடியாது அல்லவா!