கணவன்,மனைவியின் அன்யோன்யத்தை ஓய்வறையில் அவர்கள் நாள்தோறும் தூங்கும் நிலைகளை வைத்து சொல்லிவிட முடியும். அவர்களுக்குள் இருக்கும் அன்பு, பாசம், கோபம் ஆகியவை தூங்கும்போதும் பிரதிபலிக்கும். நெருங்கி தூங்குவது முதல் இடைவெளியுடன் தூங்குவது வரை உங்களுக்குள் இருக்கும் அன்யோன்யத்தை விளக்கும் தூங்கும் நிலைகள் குறித்து பார்க்கலாம்.
அரவணைத்தல் : கணவன் அல்லது மனைவி ஒருபக்கமாக தலைசாய்ந்து படுத்திருக்கும்போது, அவர்கள் மீது தங்களின் கைகளைப் போட்டு வாழ்க்கை துணை கட்டியணைத்து தூங்குவதை பெரும்பாலான கணவன்- மனைவி செய்வார்கள். அந்த நிலையில் தூங்கும்போது, வாழ்க்கைத் துணைக்கு பாதுகாப்புடன் இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இரவு முழுவதும் அவ்வாறு தூங்க முடியாது என்றாலும் குறிப்பிட்ட நேரம் வாழ்க்கைத் துணையுடன் கட்டியணைத்து தூங்குவது ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அக்கறையை வெளிக்காட்டுவதாக இருக்கும்.
இணைந்திருத்தல் : இரவு தூங்கும்போது இருவரும் முகம் பார்த்தவாறு, கைகளை அல்லது கால்களை பிணைத்து தூங்கினால், கணவன் - மனைவி மகிழ்ச்சியான மற்றும் புரிதலான வாழ்க்கையை வாழ்கிறார்கள் என புரிந்துகொள்ளலாம். வாழ்க்கைத் துணை இருவரும் ஒருவருடைய எண்ணங்களுக்கு முழுமையாக மதிப்பு கொடுத்து, ரிலாக்ஸாக இருக்கிறீர்கள். இந்த வாழ்க்கை அமைதியான மற்றும் திருப்தியான வாழ்க்கையாக இருக்கும்.
பின்புறம் இணைந்திருத்தல் : ஒரு சிலர் ஓய்வறையில் தூங்கும்போது பின்புறமாக (Back to back) ஒட்டிக்கொண்டு உறங்குவார்கள். அவர்கள் இருவருக்கும் இடையில் மிகவும் அன்யோன்யமும், நம்பிக்கையும் நிறைந்துள்ளது என பொருள் கொள்ளலாம். மேலும், இந்த நிலையில் தூங்குபவர்கள் உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஒன்றிணைய தூண்டும்.
தழுவிக்கொள்ளுதல் : கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மற்றொருவர் உடலின் மீது படுத்துறங்குவது, அவர்களுக்குள் இருக்கும் நெருக்கமான அன்யோன்யத்தை வெளிகாட்டுவதாக இருக்கும். இரவு முழுவதும் அந்த நிலையில் தூங்குவது சௌகரியமாக இருக்காது. இருப்பினும், தூங்க செல்லும் முன் சிறிது நேரம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவ்வாறு படுத்து தூங்கலாம். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் உணர்வீர்கள்.
பிணைந்திருத்தல் : உடல், கை, கால், முகம் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் பிணைந்த நிலையில் தூங்குவதாகும். தூங்க செல்லும்முன் அன்பும், காமமும் இருவருக்கும் இடையில் அளவளாவும்போது, அத்தகைய நிலையில் ஓய்வெடுப்பார்கள். ஆழ்ந்த தூக்கத்தில் இருவரின் நிலை மாறினாலும், தூங்கச் செல்லும்முன் அவ்வாறு படுத்திருப்பது, கணவன் - மனைவியின் நெருக்கத்தை காட்டுவதாக இருக்கும். அன்புக்கும், தனிநபர் சுதந்திரத்துக்கும் சரியான அளவில் இருவரும் இடம் கொடுக்கிறார்கள் எனக் கூறலாம்.
பார்த்துக்கொள்ளுதல் : கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டவாறு உறங்குவார்கள். ஆனால் இருவருக்கும் இடையில் எந்த உறசலும் இருக்காது. அப்படியான நிலையில் தூங்கினால் இருவருக்கும் இடையில் பிரச்சனை உள்ளது என பொருள் கொள்ளலாம். தூங்கும்போது சிறிய உறசல்கள், உங்களின் சண்டைகளுக்கு மருந்தாக வாய்ப்புள்ளது என்பதால், யாரோ ஒருவர் இறங்கி வருவது நல்லது.
தனித்தனியாக படுத்தல் : ஓய்வறையில் இருவரும் உறங்கினாலும், எந்தவித அன்யோன்யமும் இல்லாமல் தனித்தனியாக உறங்குவார்கள். இது இருவருக்கும் இடையில் இருக்கும் மிக சீரியஸான பிரச்சனையின் அறிகுறி. அன்பு, பாசம், காமம் என அனைத்திலும் விருப்பம் இல்லாத இருவர் தூங்கும் நிலையாகும். இந்த நிலை உறவுக்கு ஆபத்தானது என்பதால், உடனடியாக பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ள முயற்சிப்பது நல்லது.