முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

புதிதாக திருமணமானவர்கள் மட்டுமல்ல திருமணமாகி பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட பலருக்கும் இந்த கவலை தொடர்வது இயல்பானது.

  • 17

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    ஒவ்வொரு உறவும்பல அற்புதமான உணர்வை தந்தாலும் சந்தேகம், கோபம், வலி மற்றும் விரக்தி உள்ளிட்ட விஷயங்களை கடந்தே செல்கிறது. திருமணம் செய்து கொண்டுள்ள அனைவருமே மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை தான் எதிர்பார்த்து திருமண பந்தத்தில் இணைகிறார்கள். திருமண வாழ்வை கலகலப்பாக அதே சமயம் அமைதியாக வைத்திருக்க தம்பதிகள் சில விஷயங்களை செய்வார்கள். ஆனால் என்ன தான் பார்த்து பார்த்து இருந்தாலும் கூட சில தம்பதிகளுக்கு இடையிலான திருமண வாழ்க்கை மிகவும் சிக்கலாக மாறும். பின் அது பிரிவுக்கு வழிவகுக்கும். ஒரே ஒரு சிறிய தவறு கூட சில நேரங்களில் திருமண வாழ்வை ஆபத்தில் ஆழ்த்துகிறது. எனவே புதிதாக திருமண வாழ்வில் நுழைபவர்கள் எப்படி சுமுகமாக உறவை கொண்டு செல்வது என்று மிகவும் கவலைப்படுவார்கள்.

    MORE
    GALLERIES

  • 27

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    புதிதாக திருமணமானவர்கள் மட்டுமல்ல திருமணமாகி பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் சென்ற பின்னரும் கூட பலருக்கும் இந்த கவலை தொடர்வது இயல்பானது. ஒருவேளை நீங்கள் உங்கள் திருமண வாழ்வு சரியாக தான் சென்று கொண்டிருக்கிறதா என்பது குறித்து அதிகமாகச் சிந்திக்கிறீர்களா.? உங்கள் திருமண வாழ்வு சுமூகமாக தான் சென்று கொண்டிருக்கிறது அதில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை நிரூபிக்கும் சில எளிய அறிகுறிகள் இருக்கின்றன. ஆரோக்கியமான உறவின் சில அறிகுறிகள் பற்றி கீழே பார்க்கலாம்..

    MORE
    GALLERIES

  • 37

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    தயார் நிலையில் : உங்கள் திருமண வாழ்வில் உங்கள் துணையும், நீங்களும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சரி செய்ய ஆர்வமாக மற்றும் தயாராக இருந்தால்உங்கள் திருமணம் சிக்கலில் இல்லை என்று அர்த்தம். குறிப்பாக உங்களில் இருவருமே எப்போதும் பர்ஃபெக்டாக இருக்க முடியாது என்பதை பரஸ்பரம் நீங்கள் இருவரும் புரிந்து அதனை மனதளவில் ஏற்று கொண்டிருந்தால், இதை புரிந்து கொண்டு திருமண வாழ்வை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்றார் உணர்வு இருந்தால், இது ஒரு நல்ல அறிகுறி.

    MORE
    GALLERIES

  • 47

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    ஒருவரையொருவர் ஊக்குவிக்கிறீர்களா? நீங்கள் இருவரும் வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க ஒருவரையொருவர் ஊக்குவித்து கொள்கிறீர்களா.? வளர்ச்சிக்கு உதவுவதால், புதிய விஷயங்களை முயற்சி செய்து பார்க்க ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது நல்ல அறிகுறி. புதிய திறன்களை கற்று கொள்ள அல்லது அந்த சாகச பயணத்தை மேற்கொள்வது அல்லது ஒன்றாகச் செயலில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களில் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கிறீர்கள் என்றால் அவ்வப்போது இருவருக்குள்ளும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.

    MORE
    GALLERIES

  • 57

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    வெவ்வேறு கருத்துக்கள் : ஒரு விஷயத்தில் உங்கள் சொந்த கருத்துக்களை கொண்டிருப்பது ஆரோக்கியமானது என்றாலும் உங்கள் துணையின் விருப்பம் அல்லது கருத்துக்களை காத்து கொடுத்து கேட்கும் அல்லது கடைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது என்றால் நீங்கள் இருவரும் செல்லும் திருமண வாழ்வின் பாதை சரியான திசையில் உள்ளது. ஒருவரையொருவர் கருத்து கேட்டுக் கொண்டும், கவனத்தில் கொண்டும் இருந்தால் அது உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருப்பதற்கான அறிகுறியாகும்.

    MORE
    GALLERIES

  • 67

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    எந்த ரகசியமும் இல்லை : திருமண பந்தத்திற்குள் நுழைந்த பிறகு எந்த ஒரு விஷயத்திலும் ரகசியம் காப்பது நியாயமானது அல்ல. பிரச்சனைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஒருபக்கம் இருந்தாலும் கூட நீங்களும், உங்கள் துணையும் எந்த விஷயத்தையும் சமரசம் செய்து கொள்ளாமல் ஒளிவு மறைவின்றி ஒருவருக்கொருவர் விஷயங்களை பரிமாறி கொள்கிறீர்களா? உங்கள் இருவருக்குமான தொடர்பு வலிமையாக இருப்பதை இது காட்டுகிறது.

    MORE
    GALLERIES

  • 77

    உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கிறதா..? இந்த 5 அறிகுறிகளை கவனியுங்கள்

    அமைதி : பிரச்சனைகளின் போது நீங்கள் இருவரும் அமைதியை விரும்பும் நபராக இருக்கிறீர்கள் என்றால், ஒரே அறையில் இருந்து கொண்டு பேசாமல் இருந்தாலும் அவரவர் வேலையை அவரவர் அமைதியாக செய்து கொள்கிறீர்கள் என்றால் இது உண்மையில் மிகவும் நல்ல விஷயம். சில மணி நேரங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை தீர இருவருமே இடம் கொடுக்கிறீர்கள் என்னும் பட்சத்தில் அமைதி கூட நல்ல அறிகுறியே!.

    MORE
    GALLERIES