கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு, ஒருவர் அன்பு செலுத்தி உண்மையாக இருந்தால் மட்டுமே வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். ஆனால், ஆணோ அல்லது பெண்ணோ, இன்னொரு நபரை பார்த்து ஈர்க்கப்படும்போது தனது வாழ்க்கைத் துணையை ஏமாற்றிவிட்டு புதிய உறவை ரகசியமாக தொடர்கின்றனர். இதுபோன்ற நிகழ்வுகள் இன்றைய உலகில் அதிகமாகிவிட்டன.
நேர்மையான பந்தத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இவர்கள் பின்பற்ற நினைக்க மாட்டார்கள். அதே சமயம், தனக்கு வேறொருவரை பிடித்திருக்கிறது என்பதை அவ்வபோது இலைமறை காயாக பேசத் தொடங்குவார்கள். அப்படி உங்கள் வாழ்க்கைத் துணை பேசத் தொடங்குகிறார் என்றால், அதை எப்படி தெரிந்து கொள்வது என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ரகசியக் காதல் குறித்து அடிக்கடி ஜோக் அடிப்பார்கள்: உங்களுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அதே சமயத்தில், உங்கள் பார்ட்னர் வேறொரு நபருடன் தன்னை இணைத்துப் பேசி அடிக்கடி ஜோக் அடித்துக் கொண்டிருப்பார். அப்படியென்றால், அவர் அந்த நபருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார் என்றே அர்த்தம்.
கற்பனைக் கதைகளை சொல்வது: திருமண வாழ்க்கையில், தனது துணையை குஷிப்படுத்த எல்லோருமே கற்பனையாக சில விஷயங்களை பேசுவார்கள். குறிப்பாக, நாம் பெரிய வீடு வாங்கப் போகிறோம், சொகுசு கார் வாங்கி ஊர் சுற்றப் போகிறோம் என வேடிக்கையாக பேசுவார்கள். ஆனால், அதைப் போல அல்லாமல், அந்தக் கற்பனைக் கதை என்பது மூன்றாம் நபரை மையப்படுத்தி இருந்தால், ஒரு ரகசிய உறவுக்கு அவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்.
எல்லோரையும் சைட் அடிப்படது: நீங்கள் இருவரும் ஒன்றாக வெளியே செல்லும் சமயங்களில், பார்க்கும் ஒவ்வொரு நபரையும் உங்கள் பார்ட்னர் சைட் அடித்துக் கொண்டிருப்பார். அது மட்டுமல்லாமல், அவர்களது அழகை சிலாகித்து உங்களிடமே வர்ணித்துப் பேசுவார்கள். சில சமயம், அழகான ஒருவரை பார்க்கும்போது தன்னையே மறந்து விடுவார்கள். அந்த அறிகுறி என்பது உங்களை விட, அவர்கள் பிறரை அதிகம் நேசிக்கத் தொடங்குகிறார்கள் என்பதை உணர்த்தும்.
உங்கள் மீது பொறாமை இருக்காது: நீங்கள் ஏதேனும் ஒரு விஷயத்திற்காக பிற நபரை பற்றி பேசுகிறீர்கள் அல்லது அவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது இந்த நிகழ்வு குறித்து பொறாமை கொண்டு உங்கள் பார்ட்னர் உங்கள் மீது கோபம் கொள்ள வேண்டும். அப்படியில்லாமல், எதையுமே கண்டுகொள்ளாமல் இருந்தார் என்றால், உங்கள் பார்ட்னர் வேறு யாரையோ மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.