ஏமாற்றுதல் என்றால் உடலளவில் மற்றொரு இணையருடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. மாறாக மனதளவிலும் கூட பிறருடன் அவர்கள் தொடர்பில் இருக்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் வேறொரு ஆணுடன் அல்லது பெண்ணுடன் ஜொள்ளு வடிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பார்கள். ஆனால், இது போன்ற செயல்பாடுகளை சில அறிகுறிகள் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
மற்றவர்களின் மன விருப்பங்களுக்கு முன்னுரிமை : கணவராக இருந்தாலும் சரி அல்லது மனைவியாக இருந்தாலும் சரி உங்களுடைய மன விருப்பத்திற்கு முன்னுரிமை தருபவராக இருக்க வேண்டும். ஆனால், உங்கள் கண் எதிரிலேயே வேறொரு நபரின் மன விருப்பத்திற்கு அவர்கள் செவி சாய்க்கிறார்கள் என்றால் உங்களை இரண்டாம் பட்சமாக கருதுகிறார்கள் என்று அர்த்தம்.
எப்போதும் ஃபோனும் கையுமாக இருப்பது : அலுவலக சூழல் அல்லது நட்பு ரீதியாக சில சமயம் மற்றவர்களுடன் ஃபோனில் பேசுவது அல்லது டெக்ஸ்ட் மெசேஜ் செய்வது போன்றவை எதார்த்தமான விஷயம் தான். ஆனால் எந்த நேரமும் ஃபோனும், கையுமாக மூழ்கி இருக்கிறார்கள் என்றால் யாரோ ஒருவரின் அன்புக்கு அவர்கள் அடிமையாகி வருகிறார்கள் என்று அர்த்தம்.
உங்களிடமிருந்து விலகிச் செல்வது : ஒரே வீட்டில், ஒரே அறையில் வாழ்க்கை. ஆனால், ஒன்றாக அமர்ந்து உரையாடி அல்லது சாப்பிட்டு பல நாட்கள் ஆகிறது அல்லது உடல் ரீதியாக நெருங்கி பல நாட்கள் ஆகிறது என்றால் உங்கள் பார்ட்னர் உங்களிடமிருந்து விலகிச் செல்ல தொடங்கியுள்ளார் என்று அர்த்தம். உங்கள் மீதான ஈர்ப்பு குறைந்து வருவதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.