மோசமான ரிலேஷன்ஷிப்பில் ஏற்படும் மனக்கசப்புகளில் கிடைக்கும் அனுபவம் நமக்குள் ஒருவித சந்தேக கண்ணோட்டத்தை உருவாக்கிவிடும். ஆறாத காயமாக இருக்கும் அந்த அனுபவங்களால் புதிய உறவுகள் நம்பிக்கையானதா? என்ற கேள்வி எழும். ஆனால், ரிலேஷன்ஷிப் உண்மையாக இருக்க உங்களின் பங்களிப்பை 100 விழுக்காடு கொடுக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் அப்படி இருந்தும் உங்களுக்குள் சந்தேகம் இருந்தால், அதனை போக்க இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.
உங்களுக்கு பிடித்தமானது எது? ரிலேஷன்ஷிப்பில் இருக்கும்போது பார்ட்னருக்கு பிடித்த பொழுதுபோக்கு அல்லது விருப்பங்கள் உங்களுக்கும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதேநேரத்தில் உங்களுக்கு என்ன வேண்டும்? என்பது அவர்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். உங்களுக்கு பிடித்தமானதை செய்ய அனுமதிப்பார்கள். ஹெல்தியான ரிலேஷன்ஷிப்பாக இருப்பதை உங்களால் உணர முடியும். இந்த உணர்வு கிடைத்தால் பிறகு சந்தேகத்துக்கு என்ன வேலை?
கவனிப்பார்கள் உங்களின் அனுபவங்கள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்ளும்போது அவற்றில் முழு கவனத்தையும் செலுத்துவார்கள். மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய அவசியமிருக்காது. மகிழ்ச்சி மற்றும் சோகமான தருணங்கள் என எதுவாக இருந்தாலும் உங்களின் உணர்வில் முழுமையாக பங்கெடுப்பார்கள், ஆதரவாக இருப்பார்கள். இந்த உணர்வு பார்ட்னரிடம் கிடைத்தால், நல்ல ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என கூறலாம்.
பேச்சுக்கு எல்லையில்லை : வெளிப்படையாக பேசுவதற்கு உங்களுக்கு எந்தவொரு கட்டுப்பாடும் இருக்காது. மறைக்க வேண்டிய சூழல் அல்லது எண்ண ஓட்டத்தை அவர்கள் ஒருபோதும் உங்களுக்குள் உருவாக்கியிருக்க மாட்டார்கள். சில விஷயங்களை பேசுவதற்கு அசௌகரியப்பட வேண்டிய அவசியம் இல்லை என்கிற சூழல் இருக்கும். இது மகிழ்ச்சியானபோக்கு என்பதால் சரியான பார்ட்னருடன் பழகிக்கொண்டிருக்கிறீர்கள்.
சத்தியத்தை நிறைவேற்றுதல் : உங்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளை இலகுவாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். சிறிய விஷயமாக இருந்தாலும், உங்களிடம் ஒரு வாக்குறுதியை கொடுத்துவிட்டால் அதனை நிறைவேற்றுவதற்கான முழு முயற்சியையும் எடுப்பார்கள். நிறைவேற்றிவிடுவார்கள். நீண்ட கால உறவுக்கு தேவையான முக்கியமான அம்சங்களில் இதுவும் ஒன்று. நீங்கள் அதிர்ஷ்டசாலி நல்ல பார்ட்னர் கிடைத்திருக்கிறார்.
எல்லைகளை மதித்தல் : நெருக்கமான ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் இருவருக்குமான எல்லைகளை புரிந்து நடந்து கொள்வார்கள். அவர்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக உங்களை வலுக்கட்டாயப்படுத்தி திணிக்க மாட்டார்கள். உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், அதில் உங்களை ஈடுபடுத்த முயற்சிக்கமாட்டார்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், உறவில் இலகுவான போக்கையும் பேணுவதற்கு உதவும்.
சமமான முக்கியத்துவம் : வேலை சார்ந்த தேவைகள் அல்லது உதவி தேவைப்பட்டால் அவர்களின் தேவைகளுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை உங்களுக்கும் கொடுத்து அதனை நிறைவேற்றுவதற்கு உதவியாக இருப்பார்கள். உங்களால் செய்ய முடியவில்லை என்ற குற்றவுணர்ச்சியை ஏற்படுத்த மாட்டார்கள். உங்களின் முடிவில் வேண்டுமானால் மாறுபடலாம் ஆனால் முயற்சியை கைவிடுமாறு வலியுறுத்த மாட்டார்கள்.
பொதுவெளியில் ஆதரவு : பொதுவெளியில் உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் ஆரோக்கியமான அணுகுமுறையை கடைபிடிப்பார்கள். உங்களுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய வேண்டும் என எண்ண மாட்டர்கள். சிறிய அளவிலான ஜோக் அடிப்பதில் கூட உங்களை புன்படுத்தமாட்டார்கள். அவரின் அக்கறை உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். இத்தகைய உணர்ச்சிகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் நிச்சயம் நீங்கள் சரியான ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறீர்கள் என புரிந்து கொள்ளுங்கள்.