முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

வாழ்க்கையில் எல்லாம் நல்ல படியாக நடந்து கொண்டிருக்கும்போது, எதையோ இழந்துவிட்ட உணர்வு உங்கள் மனதை ஆட்டிப் படைக்கக் கூடும். நாம் மகிழ்ச்சியாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை உணராமால் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தில் இருப்பதாக சில சமயம் கற்பனை செய்து கொண்டிருப்பீர்கள்.

 • 111

  MORE
  GALLERIES

 • 211

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்ய, செய்ய நாளடைவில் அது வளர்ந்து உண்மையான பிரச்சினையாகவே மாறி நிற்கும். ஆகவே, நாம் உண்மையில் மகிழ்ச்சியாகத்தான் வாழுகிறோம் என்றால் அதை புரிந்து கொள்வதும் அவசியம். அதை கீழ்காணும் அறிகுறிகள் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 311

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  உரையாடல் : நாம் பேசும்போது அதை வைத்து விமர்சனம் வருமோ அல்லது தவறாக எதுவும் புரிந்து கொள்வார்களோ என்ற அச்சமெல்லாம் இல்லாமல் உங்கள் பார்ட்னருடன் நீங்கள் வெகு இயல்பாக உரையாடல் செய்ய முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானதாக இருக்கிறது என்று பொருள். வாயை திறப்பதற்கே பயம் என்றால் நிச்சயமாக கருத்து வேறுபாடுகள் இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 411

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  நம்பிக்கை : கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் 100 சதவீதம் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட பெரும் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். நேர்மையும், விசுவாசமும் கொண்ட வாழ்க்கை என்பது வரம் பெற்ற வாழ்க்கை என்றே குறிப்பிடலாம். இது இல்லாமல் தானே பலரும் கவலைப்படுகிறார்கள்!

  MORE
  GALLERIES

 • 511

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  பரஸ்பர மரியாதை : தம்பதியர் இருவரும் பரஸ்பரம் ஒருவருக்கு, ஒருவர் மரியாதை கொடுக்க வேண்டும். மரியாதை என்றால் வாங்க, போங்க என்பதல்ல. உங்கள் பார்ட்னரின் கருத்துக்கள், எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். ஆம், மரியாதை என்பது மனம் சார்ந்தது.

  MORE
  GALLERIES

 • 611

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  இலக்கு : இரட்டை மாட்டு வண்டியின் இலக்கு இருவேறாக இருந்தால் எப்படி இருக்கும்! அப்படித்தான் வாழ்க்கையும், ஒற்றை இலக்கை நோக்கி பயணித்தால் மட்டுமே வெற்றி காண முடியும். உங்களுக்கும், உங்கள் பார்ட்னருக்கும் இலக்கு ஒன்றுதான் என்றால் உங்கள் வாழ்க்கை கொடுத்து வைத்ததுதான்.

  MORE
  GALLERIES

 • 711

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  பயனுள்ள நேரம் : பார்ட்னருடன் இணைந்திருக்கும் நேரம் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். மாறாக இவர்களை விட்டு பிரிந்து எப்போது அந்தப் போகலாம், கொஞ்சம் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் வந்துவிடக் கூடாது. இணைந்திருப்பதை வரமாக கருதினால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியானதே.

  MORE
  GALLERIES

 • 811

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  புன்னகை : தம்பதியர் இருவருமே எதை, எதையோ பேசி சிரித்து மகிழ்பவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சி நிரம்பியிருக்கும் வாழ்க்கையில் புன்னகையும் நிரம்பியிருக்கும். மாறாக எப்போதுமே தம்பதியர் இறுக்கமான முகத்துடன் உள்ளார்கள் என்றால் அங்கே மகிழ்ச்சி இல்லை என்றே அர்த்தம்.

  MORE
  GALLERIES

 • 911

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  அன்பு, அன்யோன்யம் : உங்கள் பார்ட்னர் உங்கள் மீது தயக்கமின்றி அன்பு மழை பொழிகிறார் என்றால், எவ்வித வருத்தமும் இல்லையென்று அர்த்தம். அன்பும், அன்யோன்யமும் தம்பதியர்களின் வாழ்வில் இருந்தால், அங்கு மாற்று கருத்துகளுக்கும், சண்டைகளுக்கும் வேலை இல்லாமல் போகும்.

  MORE
  GALLERIES

 • 1011

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  மன்னிப்பு : மனிதன் என்றால் தவறு செய்யாமல் இருக்கவே முடியாது. உங்கள் பார்ட்னர் அப்படியொரு தவறை செய்யும்போது, அவர் மீது உங்களுக்கு உண்மையான அன்பு இருக்குமெனில் நீங்கள் மன்னித்து ஏற்றுக் கொள்வீர்கள். அதேபோல, உங்கள் தவறுகளையும் அவர் மன்னித்து ஏற்றுக் கொள்வார்.

  MORE
  GALLERIES

 • 1111

  உங்க திருமண வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது..? தெரிஞ்சுக்க இதை படியுங்கள்..!

  சுதந்திரம் : ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வேறு ஆர்வம் மற்றும் பழக்க, வழக்கங்கள் இருக்கும். அதற்கு நீங்கள் மதிப்பளிப்பவராக இருந்தால் உங்களிடம் சகிப்புத்தன்மை நிரம்பியுள்ளது என்று பொருள். உங்கள் பார்ட்னரும் இதே தன்மை கொண்டவர் என்றால் வாழ்வில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கும்.

  MORE
  GALLERIES