திருமணங்கள் செய்ய பணம், படிப்பு, அந்தஸ்து என பல பொருத்தங்கள் பார்க்கப்படுகின்றன. இது எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து செய்கின்ற நாம் மனப் பொருத்தம் அமைகிறதா என்பதை பார்ப்பதில்லை. ஆகவே தான், பல வீடுகளில் சண்டையும், சச்சரவுமாக இருக்கின்றன. உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையே மனப் பொருத்தம் கனக்கச்சிதமாக இருக்கிறதா, இல்லையா என்பதை நாம் சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். அவை இதோ…
ஒருவரை ஒருவர் முழுமையாக தெரிந்து வைத்திருப்பது : உடல் இரண்டாக இருந்தாலும் உள்ளம் ஒன்றாக இருக்க வேண்டும். இருவரின் சிந்தனையும் ஒரு முகமாக இருக்க வேண்டும். உங்கள் கணவரை பற்றி அல்லது மனைவியை பற்றி உங்களுக்கு தெரியாத விஷயங்களே இருக்கக் கூடாது. எது பிடிக்கும், எது பிடிக்காது என எல்லாவற்றையும் உணர்ந்தவராக இருக்க வேண்டும்.