காதலில் விழாத மனிதர்களை பார்ப்பது மிகவும் கடினம். ஏனென்றால், அனைவரின் வாழ்க்கையிலும் காதல் அனுபவம் ஒருமுறையாவது இருந்திருக்கும். முன்பெல்லாம், காதலில் விழுந்த இருவரும் ஒருவருக்கு உண்மையாகவும், அன்பாகவும், அரவணைப்புடனும் இருப்பார்கள். ஆனால், தற்போது டேட்டிங் என்ற பெயரில் உலகம் போலி உறவுகளால் நிரம்பியுள்ளது. உங்கள் காதலி உங்களை உண்மையாக காதலிக்கிறாரா? இல்லையா என்பதை எப்படி கண்டறிவது என உங்களுக்கு கூறுகிறோம்.
போலியாக காதல் செய்யும் பெண்கள், பெரும்பாலும் தங்கள் காதலை அவர்களின் நெருக்கமான நட்பு வட்டாரத்திற்கு கூட தெரிவிக்காமல் மறைக்க விரும்புகின்றனர். அதே நேரம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக ஊடகத்தில் மட்டும் மறைமுகமாக காதலை வெளிப்படுத்துகின்றனர். அதாவது, காதலிக்கும் பையனுக்கு மட்டும் இவர் இடும் காதல் பதிவுகள் தெரியும் வகையில் வைப்பார்கள்.