நீங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள நண்பர்கள் அல்லது அலுவலகத்தில் பணியாற்றக் கூடிய சக ஊழியர்களிடம் நாம் நட்பு பாராட்டுவது இயல்பான விஷயம் தான். பார்த்த மாத்திரத்தில் யார் நல்லவர், கெட்டவர் என்று கண்டுபிடித்து விட முடியாது. ஆனால், நீங்கள் தேர்வு செய்த நண்பர் தவறானவர் என்றால், அது உங்கள் நலனுக்கும் கேடு விளைவிப்பதாக அமையும். உங்கள் முகத்திற்கு நேராக இனிக்க, இனிக்க பேசினாலும் கெட்டெண்ணம் கொண்ட நட்புக்களை புரிந்து கொள்ளாவிட்டால் உங்களுக்குத்தான் ஆபத்தாக முடியும்.
உங்களை அப்படியே காப்பி அடிப்பது : உங்களிடம் இருக்கின்ற திறமை, அதற்காக நீங்கள் பெறுகின்ற பாராட்டு, இவையெல்லாம் உங்கள் நண்பரிடத்தில் பொறாமையை ஏற்படுத்தக் கூடும். ஆனால், இதை துளியளவும் காண்பித்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால், உங்கள் நடவடிக்கையை அப்படியே காப்பி அடித்து, ஏதோ இயல்பாக அந்தத் திறமையை கொண்டிருப்பதை போல காட்டிக் கொள்வார்கள்.