பாலியல் உறவு, பாலியல் உறவில் திருப்தி, உச்சம் அடைவது ஆகியவைப் பற்றி பல விதமான தவறான நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன. குறிப்பாக பெண்கள் உச்சம் அடைவது சார்ந்து ஏகப்பட்ட கட்டுக்கதைகள் நிலவி வருகின்றன. ஃபீமேல் ஆர்கசம் என்று கூறப்படும் பெண்கள் உச்சம் அடைவது பற்றி பரவலாக பகிரப்படும் தவறான தகவல்கள் பற்றிய பட்டியல் இங்கே.
பெண்கள் சுய இன்பம் செய்வது தவறு.. Masturbation, அதாவது சுய இன்பம் என்பது ஆண்களுக்கானது மட்டுமல்ல. பெண்கள் சுய இன்பம் செய்யக் கூடாது, உடல் நலத்துக்குக் கேடு என்று பரவலாகக் கூறப்படுகிறது, இது மிகவும் தவறான புரிதல். ஏற்கனவே கூறியது போல, மூன்றில் ஒரு பெண்ணுக்குத் தான் பாலியல் உறவு ரீதியாக உச்சம் அடைய முடிகிறது. எனவே, பெண்கள் சுய இன்பம் செய்வது தவறல்ல. அது மட்டுமல்லாமல், பெண்களுக்கும் இது பல விதங்களில் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நேரம் உடலுறவு கொண்டால் ஆர்கசம் கிடைக்கும்.. பெண்கள் ஆர்கசம் அடைவது என்பது கொஞ்சம் கடினமான விஷயம். இதில் பல விஷயங்கள் அடங்கியுள்ளன. பெண்ணின் மாதவிடாய் சுழற்சி, தூண்டுதல், பாலியல் உறவின் தன்மை போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் தான் ஒரு பெண்ணுக்கு ஆர்கசம் ஏற்படும். முன் விளையாட்டுக்கள், ஃபேண்டசி போன்றவை உதவும். எவ்வளவு நேரம் உடலுறவு என்பதற்கும், ஆர்கசத்துக்கும் தொடர்பு இல்லை.
பெண்கள் ஆர்கசம் அடையவில்லை என்றால் செக்சில் ஏதோ பிரச்சனை.. பாலியல் உறவில் பெண் ஆர்கசம் அடைவது என்பது நல்ல விஷயம் என்றாலும் கூட, ஆர்கசம் இல்லை என்பது மோசமான செக்ஸ் என்பதை குறிக்காது. செக்ஸ் என்பது பல செயல்களின் கலவை. காதலுடன் பேசுவதில் இருந்து, முத்தங்கள், போர்பிளே, உள்ளிட்டவை வரை, ஆண் பெண் இருவருக்கும் எந்த அளவுக்கு நெருக்கமும், பிணைப்பும் இருக்கிறது என்பது மிகவும் முக்கியம்.