புத்தாண்டு தினத்திற்கு முதல் நாள் மாலை முதல் நள்ளிரவு கடந்து காலை வரை சரியான முறையில் திட்டமிடுவது உங்களது புத்தாண்டு கொண்டாட்டத்தை எளிதாக்குவது மட்டுமல்லாமல், சிறப்பான அனுபவத்தை தரும். அதிலும் நீங்கள் புதிய ஜோடி என்றால் உற்சாகமாக கொண்டாட வேண்டும். அப்போது தான் மறக்க முடியாத நியூ இயராக உங்களுக்கு அமையும். உங்கள் புதிய பார்ட்னருடன் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுவதற்கான சில ரொமேன்டிக் வழிகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
இனிமையான மாலை நேரம் : புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு பார்ட்டிகளில் கலந்து கொள்வதன் மூலம் கொண்டாட்டத்தை பலர் துவங்கினாலும், மாலை முதலே செலிப்ரேஷன் மோடுக்கு சிலர் வந்து விடுவார்கள். உங்கள் அன்புக்குரியவருடன் மாலை மற்றும் இரவை கழிப்பதை விட சிறந்த ஒன்று இருக்க முடியுமா.!உங்கள் பார்ட்னருடன் கொண்டாடப்போகும் முதல் புத்தாண்டு என்றால், அலுவலகத்தில் பர்மிஷன் சொல்லி விட்டு மாலை சீக்கிரம் வீடு திரும்பி உங்கள் பார்ட்னருடன் ஒன்றாக நேரம் செலவிட்டு மாலை நேரத்தை இனிமையாக்குங்கள். மொபைல் மற்றும் பார்ட்டிகளை தவிர்த்து விட்டு நீங்களும், பார்ட்னரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவது புத்தாண்டு கொண்டாட்ட அனுபவத்தை புதுமையாக்கும்.
உள்ளூரிலேயே கொண்டாட்டம் : உங்கள் பட்ஜெட் பிரபல டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் அல்லது வெளிநாடுகளுக்கு சென்று புத்தாண்டு கொண்டாடுமளவிற்கு இல்லை என்றால் உங்களுக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதிகளுக்கு சென்று அங்கிருக்கும் ஒரு ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பு அல்லது ரிசார்ட்டில் உங்கள் பார்ட்னருடன் பொழுதை கழிப்பது சிறப்பாக இருக்கும்.
நள்ளிரவு உலா : புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவில் உங்கள் புதிய லைஃப் பார்ட்னருடன் தெருக்களில் ஒன்றாக கை கோர்த்து நடந்து செல்வது உங்களுக்கிடையேயான நெருக்கத்தை அதிகரிக்கிறது. இப்போதெல்லாம் நியூ இயர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தெருக்களில் பல சாகச மற்றும் வேடிக்கை நிகழ்வுகள் நடத்தப்படுவதால் அவற்றை பார்த்து கொண்டே ரிலாக்ஸாக நடந்து செல்வது புத்தாண்டை ரிலாக்ஸாக அனுபவிக்க உதவுகிறது.
இலக்குகளை பற்றி பேசுங்கள் : புத்தாண்டு அதுவுமாக உங்கள் லைஃப் பார்ட்னடருடன் எதிர்காலத்தை பற்றி விவாதிப்பது, உங்களுடைய தனிப்பட்ட மற்றும் குடும்பத்தின் இலக்குகள் பற்றியும் கலந்தாலோசித்து அவற்றுக்கு தேவையான எந்த நடவடிக்கைகளை வரும் புத்தாண்டில் முன்னெடுக்கலாம் என்பது பற்றியும் பேசி முடிவெடுப்பது, உங்களது பார்ட்னரின் இலக்கு என்ன என்பதையும் கேட்டு அதற்கான நடவடிக்கைகளை துவக்குவது என புத்தாண்டை மிகவும் பயனுள்ளதாக துவக்கலாம்.
படுக்கையில் நேரம் செலவிடலாம் : நீங்கள் புதிய ஜோடியாக இருந்தால் படுக்கையில் நேரம் செலவிடுவதன் மூலம் புத்தாண்டை மிகவும் ரொமேன்டிக்காக துவக்கலாம். எப்போதையும் விட புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையில் நீங்கள் இருவரும் நெருங்கி பழகுவது என்பது அடுத்து வரும் 12 மாதங்களுக்கு உங்கள் மனநிலையை செட் செய்வதற்கான உண்மையான காதல் வழியாக இருக்கும்.
தேவையற்ற பழக்கம் : புத்தாண்டில் உங்களுக்குள் நெருக்கம் அதிகரிக்க நீங்கள் இருவரும் மாற்றி கொள்ள விரும்பும் எதிர்மறை விஷயங்களை பேப்பரில் எழுதுங்கள். என்ன எழுதுகிறீர்கள் என்று வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. நீங்கள் இருவரும் எழுதி வைத்திருக்கும் மாற்றி கொள்ள வேண்டிய விஷயங்களை ஒன்றாக அமர்ந்து தீயில் எரித்து விடுங்கள்.
கேம் நைட் : உங்களுக்கும், உங்கள் பார்ட்னருக்கும் கிளாசிக் போர்டு கேம்ஸ் விளையாட பிடிக்கும் என்றால், இதனை நாள் அதற்கு நேரம் செலவழித்திருக்க மாட்டீர்கள். இதற்கு இந்த புத்தாண்டை சிறந்த நேரமாக மாற்றுங்கள். உங்கள் இருவருக்கும் பிடித்த கேம்ஸ்களை மகிழ்ச்சியாக விளையாடுவதன் மூலம் புத்தாண்டை இனிமையாக்குங்கள்.