முகப்பு » புகைப்பட செய்தி » உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

காதல் உறவாக இருந்தாலும் சரி அல்லது திருமண பந்தமாக இருந்தாலும் சரி, ஆண் பெண் இருவர் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுத்து விட முடியாது.

 • 19

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  காதல் உறவாக இருந்தாலும் சரி அல்லது திருமண பந்தமாக இருந்தாலும் சரி, ஆண் பெண் இருவர் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் ஏற்படுவதை முற்றிலுமாக தடுத்து விட முடியாது. இருவரின் சிந்தனையும் வேறானது, இருவரின் விருப்பு, வெறுப்புகளும் வேறானது, என்ற நிலையில் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?

  MORE
  GALLERIES

 • 29

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  அதேசமயம், சின்னஞ்சிறிய அளவில் ஏற்படக்கூடிய சண்டைகளும் கூட, நாளடைவில் பெரியதாக வளர்ந்து, இருவரும் பிரிந்து செல்லக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால் நம்முடைய குணாதிசயங்களில் இயல்பான சில மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால், இந்த பிரிவுகளை தவிர்த்து நம் பந்தத்தை நாம் பலமானதாக வைத்துக் கொள்ள முடியும்.

  MORE
  GALLERIES

 • 39

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  கலந்துரையாடல் அவசியம் : ஒரு ஜோடியினர் இடையே இடைவெளி அதிகரிக்கிறது என்றால், அதற்கான முதல் அறிகுறி கலந்துரையாடல் இல்லாமல் போவது தான். எந்த ஒரு விஷயத்தையும் மனதில் பூட்டி வைத்துக் கொண்டு அது குறித்து விவாதிக்காமல் இருப்பது அந்த சிக்கலை பெரியதாக மாற்றுகிறது. கோபங்களை உங்களுக்குள் பூட்டி வைத்துக் கொள்வதால், உங்கள் பார்ட்னரின் கருத்து என்னவென்று தெரிந்து கொள்ளாமலேயே நீங்கள் வெறுப்புணர்வை வளர்த்துக் கொள்கிறீர்கள். ஆகவே, மனம் விட்டு கலந்துரையாடுவது அவசியம் ஆகும்.

  MORE
  GALLERIES

 • 49

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  வெளிப்படைத் தன்மை : உங்கள் காதல் உறவு அல்லது திருமண உறவில் நீங்கள் வெளிப்படை தன்மையையும், நேர்மையையும் கடைபிடிக்க வேண்டும். எதையும் நீங்கள் ரகசியமானதாக செய்ய முற்படுகின்ற போது, உங்கள் பார்ட்னருக்கு உங்கள் மீதான சந்தேகம் எழுவதோடு, அதுவே பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து விடுகிறது. நீங்கள் செய்வது சரியோ, தவறோ அது குறித்து இருவர் இடையே புரிதல் இருக்க வேண்டும். இந்த புரிதல் என்பது பரஸ்பரம் இருதரப்பிலும் அமைய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 59

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  காதல் நெருக்கம் : ஆண், பெண் தம்பதியர் இடையே மனரீதியாக ஏற்படும் பிரச்சனைகள் பலவற்றுக்கு, உடல் ரீதியாக ஏற்படும் பந்தமே பல சமயங்களில் மருந்தாக அமைகிறது. என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், உங்கள் பார்ட்னரிடம் காதல் உணர்வுகளை வெளிப்படுத்த தயங்க வேண்டாம். ரொமான்ஸ் சமயத்தில் கோபங்கள் தணிந்து, அன்பு மேலோங்கும்.

  MORE
  GALLERIES

 • 69

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  தேவைகள் குறித்து பேசுவது : உங்களுடைய தேவைகள் என்ன என்பதை நீங்கள் உங்கள் பார்ட்னரிடம் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். அதேபோன்று அவர்களுடைய தேவைகள் என்ன என்று தெரிந்து கொண்டு அவற்றை பூர்த்தி செய்ய நீங்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இது டூ இன் ஒன் பலனாக அமையும்.

  MORE
  GALLERIES

 • 79

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  பொருளாதார உதவி : நிதி சார்ந்த விஷயங்களில் கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். யார் கூடுதலாக செலவு செய்கிறோம் என்று ஒருவர் மீது ஒருவர் பழி போடாமல், எந்த செலவுக்கு எவ்வளவு பணம் ஒதுக்க வேண்டும், எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று இருவரும் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும். இதனால் தேவையற்ற பிரச்சனைகள் குறைகிறது.

  MORE
  GALLERIES

 • 89

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  பொறாமை : கணவன், மனைவியே ஆனாலும் இருவருக்கும் சுயநலன், பொறாமை, போட்டி போன்ற குணாதிசயங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், இருவரில் யார் வெற்றி பெற்றாலும், அது இருவருக்குமான வெற்றி என்ற அடிப்படை உண்மையை புரிந்து கொண்டு பொறாமையை விட்டுக் கொடுத்தால் வாழ்க்கை இனிப்பானதாக மாறும்.

  MORE
  GALLERIES

 • 99

  உடனே பிரேக்-அப்னு முடிவு பண்ணாதீங்க... கடைசியா இந்த விஷயங்களை முயற்சி செய்து பாருங்க..!

  அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் : உங்கள் நட்பு அல்லது உறவு வட்டத்தில் உள்ள ஆண் ஒருவர், அவரது மனைவிக்கு விலை உயர்ந்த பொருள் ஒன்றை பரிசு அளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அதை பார்த்து நம்முடைய கணவரும் அப்படியே நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது. ஏனென்றால், ஒவ்வொருவருடைய திறனும் மாறுபடுகிறது. ஆகவே, உங்களுடைய எதிர்பார்ப்பு என்பது அவர்களுடைய திறனுக்கு ஏற்றவாறு அமைய வேண்டும்.

  MORE
  GALLERIES