காதலர்கள் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருசிலர் அவர்களின் முன்னாள் பார்ட்னருடைய குணாதிசயங்களை புகழ்ந்து பேசிவிடுவார்கள். இதனால், இருவருக்கும் இடையே நடந்த மகிழ்ச்சியான உரையாடலின் நிலை தலைகீழாக மாறி சண்டை வரவும் வாய்ப்பிருக்கிறது. ஒன்று இரண்டு முறைக்குமேல் சொல்லியும் முன்னாள் பார்ட்னருடைய புகழை பாடிக்கொண்டே இருப்பார்களானால், அவர்களை விட்டு விலகுவது நல்லது. ஒரு சில விஷயங்களை ஆராய்ந்தால், உங்கள் பார்ட்னர், அவரின் முன்னாள் பார்ட்னருடன் தொடர்பில் இருக்கிறாரா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
முன்னாள் காதலன்/ காதலியை நினைத்துக்கொண்டு இருத்தல் : நீங்கள் விரும்பும் நபர் அடிக்கடி அவரின் முன்னாள் பார்ட்னருடைய நினைவிலேயே இருப்பதை உங்களால் உணர முடியும். அண்மையில் அவரை பிரிந்து உங்களுடன் கமிட்டாகி இருக்கிறார் என்றால், நிச்சயமாக அவரின் முன்னாள் பார்ட்னரை அடிக்கடி நினைப்பார்கள். நீங்கள் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென முன்னாள் பார்ட்னரை பற்றி பேசி மூடவுட் ஆக்கிவிடுவார்கள். அவரின் முன்னாள் பார்ட்னருடைய தொடர்பை முழுமையாக துண்டிக்காமல் உங்களுடன் கமிட்டாகி இருந்தால், அவரின் நினைவில் முதன்மையான இடம் முன்னால் பார்ட்னருக்கே இருக்கும்.
முன்னாள் காதலன், காதலியின் சமூகவலைதளத்தை பார்த்தல் : இன்றைய காலகட்டத்தில் முன்னாள் காதலன்/ காதலியின் டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்கள் உங்கள் கண்களில் படுவது இயல்புதான். ஆனால், உங்கள் பார்ட்னர், அவரின் முன்னாள் பார்ட்னருடைய சமூகவலைதள பக்கங்களிலேயே மூழ்கியிருந்தால், பழைய நினைவுகளில் இருந்து வெளியே வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. இதனால், முன்னாள் பார்னருடைய நினைவலைகளிலேயே இருப்பார்கள். உங்கள் இருவருக்கும் இடையே இது ஒருவித தவறான புரிதலை ஏற்படுத்தவும் வாய்ப்புகள் அதிகம். மேலும், நீங்கள் உங்கள் பார்ட்னருடைய பழைய பதிவுகளை பார்க்கும்போது, அதனை அவர் பார்த்துவிட்டால், உங்கள் மீது எதிர்மறை எண்ணம் ஏற்பட வாய்ப்புகளும் உண்டு.
முன்னாள் காதலன்/ காதலியுடன் தொடர்பு : ஒரு சிலர், பிரேக் அப் ஆன பிறகும் நட்பு என்ற முறையில் தொடர்பில் இருப்பார்கள். கேட்டால், மனம் ஒன்றி பிரிந்து விட்டதாகவும், தற்போது நண்பர்களாக இருப்பதாக கூறுவார்கள். அவர்களைவிட்டு முழுமையாக பிரிய மனமில்லாமல் இருப்பதற்கான அறிகுறிதான் இதுவும். அவ்வாறு உங்களுடைய முன்னாள் பார்ட்னருடன் தொடர்பில் இருப்பது என்பது, நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்த காலங்களின் நினைவுகள் உங்களுடன் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இது நல்லதல்ல.
முன்னாள் காதலன்/ காதலியின் பெயரை பயன்படுத்துதல் : உங்கள் பார்ட்னர், அவரின் முன்னாள் பார்ட்னரின் பெயரையும், செயலையும் அனைத்து சூழல்களிலும் அடிக்கடி நினைவுகூர்கிறார்கள் என்றால், உங்கள் இருவருக்குமான உறவை மறுபரிசீலனை செய்ய வேண்டியது நல்லது. குறிப்பிட்ட நபர் உங்கள் பார்ட்னரின் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்களிப்பைக் கூட கொடுத்திருக்கலாம், ஆனால் அதனை நீங்கள் இருவரும் வாழும் வாழ்க்கையில் நினைவுகூற வேண்டிய அவசியமில்லை. ஒருமுறைக்கு இருமுறை தெளிவுபடுத்திய பிறகும் உங்கள் பார்ட்னர் தொடர்ந்து செய்தார் என்றால், உங்கள் முடிவை நீங்கள் அவருக்கு தெளிவாக தெரிவித்துவிட வேண்டும்.
முன்னாள் காதலன்/ காதலியை பிரியமாட்டார்கள் : உங்கள் பார்ட்னரின் பெரும்பாலான செயல்கள், அவரின் முன்னாள் பார்ட்னரை பிரியமனமில்லாமல் இருக்கிறார் என்பதை உணர்த்தும். அவர்கள் மனம் முழுவதும் முன்னாள் பார்ட்னரைப் பற்றியே சுழன்று கொண்டு இருக்கும். அவள் என்னை எப்படியெல்லாம் காயப்படுத்தினால், திட்டினாள், கோபப்படுத்தினாள், நாங்கள் இருவரும் எப்படி இருந்தோம் என்பதைப் பற்றியே உங்கள் பார்ட்னர் சிந்தித்துக் கொண்டிருப்பார். இதுபோன்ற சிந்தனையில் இருப்பவர்கள், அவர்களே முயன்று வெளியே வந்தால் மட்டுமே உண்டு. நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும், முன்னாள் பார்ட்னரின் நினைவுகளில் இருந்து வெளியே வர உங்கள் பார்ட்னர் ஒப்புக்கொள்ள மாட்டார்.