உணவுப் பழக்கம் மற்றும் பிஎம்ஐ : ஆரோக்கியமான உணவுகள் மற்றும் சீரான உணவுப் பழக்கத்தை கொண்டிருந்தால் மட்டுமே இனப்பெருக்க நலன் மேம்படும். குறிப்பாக, ஆண்களைப் பொருத்தவரையில் அல்புமின், செரோபிளாஸ்மின் மற்றும் ஃபெர்ரிடின் போன்ற ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிகரிக்க சத்தான உணவு அவசியமாகும். இவையெல்லாம் ஆண்களின் விந்தணு தரத்தை மேம்படுத்தக் கூடியவை ஆகும்.
புகைப்பழக்கம் : சிகரெட்டில் 4 ஆயிரம் வகையான ரசாயனங்கள் உள்ளன. புகைப்பிடிக்கும் ஆண்களுக்கு மொத்த விந்தணு எண்ணிக்கை குறையும் மற்றும் விந்தணுக்களின் நகர்வு, அவற்றின் தரம், கருத்தரித்தல் திறன் ஆகியவை பாதிக்கப்படும். அதேபோல, பெண்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருக்கும் பட்சத்தில் கருமுட்டை உற்பத்தி பாதிக்கப்படும்.
உளவியல் பிரச்சினைகள் : உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தம்பதியர்கள் எதிர்கொள்ளும் ஸ்ட்ரெஸ் பிரச்சினைகளும் கூட அவர்களின் கருத்தரித்தல் திறன் பாதிக்க காரணமாக அமைகிறது. அதிலும் கருத்தரித்தல் தாமதமாகும்போது அதனால் நட்பு மற்றும் சொந்தம் சார்ந்த சமூக வட்டத்தில் எழக் கூடிய விமர்சனங்கள், பிரச்சினையை கண்டறிவதற்கான பரிசோதனை, அதற்கான சிகிச்சை, இதற்கு ஆகும் செலவு என அத்தனை விஷயங்களுமே தம்பதியர்களுக்கு மனக் கவலையை அதிகரிக்கும் விஷயங்களாக உள்ளன. இதுவும் கூட தம்பதியர்களின் கருத்தரித்தல் திறனை பாதிக்க காரணமாக அமைகிறது.