முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

காதலர் தினத்தில் அன்பை வெளிப்படுத்த சாக்லேட், ரோஸ், பரிசுப்பொருட்கள் என பற்பல விஷயங்கள் இருப்பினும், எல்லாவற்றையும் ஒரே நாளில் கொடுத்து திக்கு, முக்காட செய்வதைக் காட்டிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சர்பிரைஸ் கொடுத்து கொண்டாடலாம்.

  • 15

    அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

    பிப்ரவரி 14ஆம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதிதாக காதலில் இணைந்திருப்பவர்கள் மட்டும்தான் இதை கொண்டாட வேண்டும் என்பதில்லை. அன்பை வெளிப்படுத்த தடையேதும் கிடையாது என்பதால் திருமணமான தம்பதியர்கள், வயதான தம்பதியர்கள் உள்பட அனைவருமே கொண்டாடலாம்.அதே சமயம், பிப்ரவரி 14 மட்டுமே சிறப்புக்குரிய நாள் என்றில்லை. இதையொட்டிய ஒரு வாரம் முழுவதுமே கொண்டாட்டத்திற்குரிய பொழுதுகள் தான். அந்த வகையில் பிப்ரவரி 9ஆம் தேதியான இன்று சாக்லேட் டே  கொண்டாடப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 25

    அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

    சாக்லேட் தினம் ஏன்  : சாக்லேட் என்றால் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு இது. அது மட்டுமல்லாமல் சாக்லேட்டை சுவைக்கும்போது மனதில் இன்பமான நினைவுகள் அலைமோதும். ஆக, இந்த நாளை நீங்கள் தவறவிட வேண்டாம். உங்கள் மனைவி அல்லது பெண் தோழி அல்லது நண்பர்களுக்கு சாக்லேட் கொடுத்து மகிழ்விக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 35

    அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

    சாக்லேட் டே முக்கியத்துவம்  : சாக்லேட் முதன்முதலில் 1550ஆம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் ஆனது. இதையொட்டி உலக சாக்கலேட் தினம் ஆண்டுதோறும் ஜூலை 7ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும், காதலர் தினம் வருகின்ற பிப்ரவரி மாதத்திலும் சாக்லேட் கொண்டாட்டத்திற்கு இடமளிக்கப்படுகிறது.வாக்குறுதி நாள், முத்தம் நாள், கட்டியணைக்கும் நாள் என்று பல நாட்களைக் கொண்டதாக காதலர் தின வாரம் இருந்தாலும், நேரடியாக நாம் சுவைக்கும், தேன் போல கரையும் சாக்கலேட் தினம் குதூகலம் நிறைந்ததாக இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 45

    அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

    சாக்லேட்டின் பலன்கள்  : காதலர் தினத்திற்கான கொண்டாட்டம் என்பதைத் தாண்டி சாக்லேட் சாப்பிடுவதால் பல வகையில் நன்மை உண்டு என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். உதாரணத்திற்கு சாக்கலேட் சாப்பிட்டால் நம் சருமம் பளபளப்பாக மின்னும். சாக்லேட்டில் ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பிளேவனாய்ட்ஸ் என்ற சத்து நம் உடலுக்கு ரிலாக்ஸ் அளிக்கக் கூடியதாகும்.

    MORE
    GALLERIES

  • 55

    அது என்ன சாக்லேட் டே..? என்று சிங்கிள்ஸ்க்கு இருக்கும் சந்தேகம் தீர இதை கண்டிப்பா படிங்க..!

    டார்க் சாக்லேட் சாப்பிடலாம் : மற்ற சாக்லேட் காட்டிலும் டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் மிகுதியான நன்மை உண்டு. இது நம் மனதில் உள்ள ஸ்ட்ரெஸ் அளவுகளை குறைக்கும். டார்க் சாக்லேட்டில் உள்ள பிளேவனாய்ட்ஸ் நமக்கு சர்க்கரை அளவை மிகுதியாக அதிகரித்துவிடாது. ஆகவே சர்க்கரை நோய் வந்துவிடும் என்ற அச்சமின்றி இதை சாப்பிடலாம்.சாக்லேட் தினத்திற்கு அடுத்த நாள் டெடி தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெடி பியர் மற்றும் இதர பொம்மைகளை பரிசாக வழங்கி மகிழலாம்.

    MORE
    GALLERIES