முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

உங்கள் சகோதரிக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று இன்னும் நீங்கள் குழப்பத்தில் இருந்தால் இங்கே சில ஐடியாக்களை பாருங்கள்... உங்கள் சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க நீங்கள் தேர்வு செய்ய கூடிய சிறந்த பரிசு தேர்வுகள் இங்கே...

 • 18

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  ரக்ஷா பந்தன் என்பது ஒரு சகோதரனுக்கும் சகோதரிக்கும் இடையிலான தூய அன்பு மற்றும் உறவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள நாளாக கொண்டாடப்படுகிறது. இந்திய பண்டிகைகளில் மிகவும் விரும்பப்படும் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது ரக்ஷா பந்தன். இந்த நாளில் ஒரு சகோதரி தனது சகோதரனின் மணிக்கட்டில் ஒரு புனித நூலை (ராக்கி கயிறு) கட்டுகிறார்.

  MORE
  GALLERIES

 • 28

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  பாசத்துடன் சகோதரி கட்டி விடும் இந்த புனித மெல்லிய கயிறு அதை அணிபவரை காக்கும் என்றும் நம்பப்படுகிறது.மேலும் ஒரு சகோதரர் தனது சகோதரியை பாதுகாப்பதாக மற்றும் கவனித்து கொள்வதாக ரக்ஷா பந்தன் அன்று உறுதியளிக்கிறார். அதே போல இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களிடமிருந்து ஸ்பெஷல் பரிசுகளை எதிர்பார்க்கிறார்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  நாடு முழுவதும் விரைவில் ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட உள்ள நிலையில், நீங்கள் உங்கள் சகோதரிக்கு ரக்ஷா பந்தன் கிஃப்ட் வழங்க திட்டமிட்டு கொண்டிருக்கலாம். உங்கள் சகோதரிக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம் என்று இன்னும் நீங்கள் குழப்பத்தில் இருந்தால் இங்கே சில ஐடியாக்களை பாருங்கள்... உங்கள் சகோதரியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க நீங்கள் தேர்வு செய்ய கூடிய சிறந்த பரிசு தேர்வுகள் இங்கே...

  MORE
  GALLERIES

 • 48

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  ஸ்மார்ட் வாட்ச்: ஸ்மார்ட் வாட்சுகள் என்பவை இப்போதெல்லாம் ஒரு ட்ரெண்டாக இருக்கிறது, எல்லோருமே ஸ்மார்ட் வாட்ச் அணிய விரும்புகிறார்கள். இந்த வருட ரக்ஷா பந்தன் அன்று உங்கள் அன்பான சகோதரிக்கு ஏன் நீங்கள் நல்ல ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை வாங்கி பரிசளிக்க கூடாது.! பல புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ள ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் இன்றைய காலகட்டத்தில் அவசியமான ஒன்றாகவும் கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 58

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  ஜூவல்லரி ஐட்டம்ஸ்: நகைகள் பெண்களுக்கு எப்போதும் விருப்பமான தேர்வாக இருக்கும். ஒரு அழகான நெக்லஸ், இயர்ரிங்ஸ் அல்லது மோதிரங்கள் உங்கள் சகோதரி முகத்தில் சிரிப்பை வர வைக்கும். ரக்ஷா பந்தன் அன்று தங்கம் மற்றும் வெள்ளி போன்ற உலோகங்களால் செய்யப்பட்ட நகைகளை சகோதரிக்கு பரிசளிப்பது அதிர்ஷ்டமான வாழ்வை அவர்களுக்கு அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 68

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  ஹெட்ஃபோன்ஸ்: உங்கள் சகோதரிக்கு ரக்ஷா பந்தன் பரிசளிக்க பொருத்தமான மற்றொரு கேஜெட் பொருள் ஹெட்ஃபோன்கள். பயணங்களின் போதும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அலல்து பாடல்களை கேட்கும் போதும் ஹெட்ஃபோன்ஸ் பெரிதும் பயன்படுகிறது. எனவே நீங்கள் வாங்கி கொடுக்கும் தரமான ஹெட்ஃபோன் ஒவ்வொரு முறையும் உங்கள் சகோதரி அதைப் பயன்படுத்தும் போது உங்களைப் பற்றி நினைப்பார்.

  MORE
  GALLERIES

 • 78

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  ஸ்கின் மற்றும் ஹேர் கேர் தயாரிப்புகள்: வருவது மழைக்காலம் என்பதால் பிரேக்கவுட்ஸ், முடி உதிர்தல், வறண்ட சருமம் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க பெண்கள் தங்கள் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். எனவே உங்கள் சகோதரி தனது சருமம் மற்றும் கூந்தலை நன்கு கவனித்து கொள்ள உதவும் சிறந்த ஸ்கின் மற்றும் ஹேர் கேர் தயாரிப்புகளை வாங்கி பரிசளித்து அவர்களை மகிழ்விக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 88

  உங்கள் சகோதரியை உற்சாகப்படுத்த 5 ரக்ஷா பந்தன் கிஃப்ட் ஐடியாஸ்

  அழகுசாதனப் பொருட்கள்: காஜல், லிப்ஸ்டிக், ஐ-லைனர், ப்ளஷ், கான்டூர் கிட், ஐ லேஷ் பேலட் உள்ளிட்ட அனைத்து அழகுசாதனப் பொருட்களும் உங்கள் சகோதரியிடம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தி கொண்டு, அவர்களிடம் இல்லாத காஸ்மெட்டிக் அல்லது மேக்கப் பொருட்களை வாங்கி கொடுப்பது சிறந்த ரக்ஷாபந்தன் கிஃப்ட்டாக உங்கள் சகோதரிக்கு இருக்கும்.

  MORE
  GALLERIES