எல்லா காதலும் திருமணத்தில் சேர்வதில்லை. சில காதல்கள் சில நியாயமான காரணங்களால் பிரிந்து விடும். காதலிப்பவர்கள் பிரிந்தாலும், பிரிவு பல காலம் வரை பாதிப்பை ஏற்படுத்தும். பிரேக் அப் ஆன பிறகு, தன்னுடைய காதலன் / காதலி எப்படி இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வமும் பலருக்கும் இருக்கும். ஒருவேளை, அவர் நன்றாக, மகிழ்ச்சியாக இருந்தால் கண்டிப்பாக வருத்தம் ஏற்படும். ஆனால், உங்கள் எக்ஸ் உங்களை மிஸ் பண்ணியதற்காக, உங்களைப் பிரிந்ததற்காக வருத்தப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? இந்த உளவியல் ரீதியான வழிமுறைகளை பின்பற்றினால், உங்கள் எக்ஸ் உங்களை மறக்கவே மாட்டார்.
தொடர்பு கொள்ளக் கூடாது ஆனால் அவருடைய பார்வையில் இருக்க வேண்டும் : பிரிந்த காதலர்கள் செய்யும் பெரிய தவறுகளில் ஒன்று, பிரிந்து சென்ற பிறகும் தொடர்பில் இருப்பது தான். அது உங்கள் மீது அவமரியாதையை ஏற்படுத்தும். நீங்கள் பேசவோ, தொடர்பு கொள்ளவோ முயற்சி செய்தால், உங்களை மதிக்கவே மாட்டார்கள். எனவே, உங்கள் காதலன் / காதலி பிரிந்து சென்றுவிட்டால், அதைப் பொருட்படுத்தாமல், பேசுவதற்கு அல்லது மெசேஜ் அனுப்புவதற்கு கூட முயற்சி செய்யாதீர்கள். ஆனால், நீங்கள் என்ன செய்கிறீர்கள், எப்படி இருக்கிறீர்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ளும் படி பார்வையில் இருக்க வேண்டும்.
நீங்கள் அவரை மறந்துவிட்டீர்கள் என்பதை உணர்த்துங்கள் :
மேலே கூறியதைப் போல, ஒருவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றால், கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, காதலன் அல்லது காதலியை நீங்கள் முழுவதுமாக மறந்து விட்டீர்கள் என்பதை உணர்த்த வேண்டும். அதாவது, உங்களிடம் பிரேக் அப் செய்தவர் பற்றி தவறாக கோபமாக பேசுவது, எமோஷனலாக ஸ்டேட்டஸ் வைப்பது, பிளாக் செய்வது, உள்ளிட்ட எதையும் செய்யக் கூடாது. நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள் என்பதை அவருக்கு வெளிப்படுத்தினால் போதும்.
உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள் : பிரிவும் வலியும் ஒருவரை மேம்படுத்தும். ஏதோ ஒரு காரணத்துக்காக, நீங்கள் ஏதோ செய்திருக்கலாம் அல்லது செய்யாமல் போயிருக்கலாம், அதற்காக, உங்கள் காதலன் / காதலி உங்களை விட்டுப் பிரிந்திருக்கலாம். உதாரணமாக, நீங்கள் விரும்புவது, கோபம், புகை பிடிக்கும் பழக்கம், சோம்பேறித்தனம் என்று ஏதேனும் காரணம் இருக்கலாம். உங்கள் மீது எந்தத் தவறும் இல்லாமல், பிரேக்அப் ஆன பிறகு, நீங்கள் பழிவாங்க வேண்டுமானால், உங்களை மேம்படுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. உடல் ரீதியாக ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும், மன ரீதியாக வலிமையான நபராக மாறி, உங்களை இழந்ததற்காக வருத்தப்பட செய்யலாம். இது அவருக்காக இல்லையென்றாலும், உங்களுக்காக செய்ய வேண்டும்.
பயணம் செய்யுங்கள் :பயணம் ஒரு நபரை பல விதங்களில் மெருகேற்றிக் கொள்ள உதவும். புதிய இடங்கள், புதிய மனிதர்கள் என்று உங்கள் வாழ்வே புதிதாக மாறும். பிரேக் அப் ஆன வலியில், கஷ்டத்தில் இருந்து உங்களை பயணம் மீட்டெடுக்கும். நீங்கள் கோபத்தை அல்லது வருத்தத்தை மறைக்க வேண்டாம். இயல்பாகவே அது உங்களை விட்டு நீங்கி, புதிய நபராக / பெண்ணாக மாற்றும். உங்கள் விருப்பம் போல, தனியாகவோ அல்லது ஏதேனும் குழுவினருடனோ பயணம் செய்யுமாக. புகைப்படங்கள், வீடியோக்கள் எடுங்கள். நீங்கள் எதுவும் பேச வேண்டாம், உங்கள் பயணம் உங்களை பற்றி பேசும். சில காலம் பிறகு உங்களுக்கே அந்த புகைப்படங்களைப் பார்த்து மகிச்சியாக இருக்கும். பயணம் செய்வதை உங்கள் சமூக வலைத்தள கணக்கில் பகிருந்தால், உங்கள் உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் எக்ஸ் கட்டாயம் உங்களை இழந்ததைப் பற்றி வருத்தப்படுவார்.
உங்கள் வேலையில் முன்னேறுங்கள், வெற்றி பெறுங்கள் : நல்ல வேலை இல்லை, நீ செய்யும் வேலை எனக்கு பிடிக்கவில்லை, பிசினஸ் செய்ய முடியாது என்று வேலை மற்றும் தொழில் காரணமாக பிரிவு நிறைய ஏற்படும். விருது வாங்க வேண்டும், வெற்றிகரமான தொழிலதிபர் ஆக வேண்டும், என்பதெல்லாம் இல்லை. நீங்கள் எந்த வேலை செய்தாலும், அதில் தற்போதைய நிலையை விட, கூடுதலாக முன்னேற வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள், அதில் வெற்றி பெறுங்கள். உங்கள் எக்ஸ் உங்களை பிரேக்அப் செய்ததை மோட்டிவேஷன் ஆக எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் பெரிய உயரங்கள் தொடுவது தான், உங்களை பிரிந்து சென்றவருக்கு பாடமாக இருக்கும்.