காதல், திருமணம் என்ற உறவுகளில் சொல்லப்படாத கமிட்மென்ட் இருக்கும். மகிழ்ச்சியான நேரங்களில் மட்டுமல்லாமல், கஷ்ட நஷ்டங்களில் துணையிருப்பேன் என்ற மறைமுக உறுதி மொழி இருக்கும். காதலர் தின கொண்டாட்டங்களில் ஒன்றுதான் பிராமிஸ் தினம். இது பிப்ரவரி மாதம் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. காதலர்கள், தம்பதிகள் ஒருவொருக்கொருவர் எதில் எல்லாம் உறுதி அளிக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
உறவு போரடிக்காமல் பார்த்துக் கொள்வது : எவ்வளவு தீவிரமான, ஆழமான காதலாக இருந்தாலும் சரி, ஒரு கட்டத்தில் உறவு சலித்துப் போகும் அளவுக்கு ஏதேனும் தோன்றலாம். வழக்கமான ரொட்டீன் போர் அடிப்பது போல இருக்கலாம். எனவே இந்த காலத்தில் வெறுமையாகத் தோன்றாமல் பார்த்துக்கொள்ள முடியும் என்ற உறுதிமொழியை அளிக்கலாம். ஒரு விஷயத்தை நீ 10 முறை கூறினாலும் அதை நான் சோர்வடையாமல் கேட்பேன் என்று கூறி அன்பை வெளிப்படுத்தலாம்.
கடந்த காலம் பற்றி பேசி காயப்படுத்தக் கூடாது : எல்லோருக்குமே கடந்த காலத்தில் கசப்பான அனுபவங்கள் அல்லது சிலருக்கு கடந்த கால இருக்கும். கடந்த காலத்தில் இருப்பதைப் போலவே, இன்றும் ஒரு நபர் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அனுபவங்களும் காலமும் ஒரு நபரை மாற்றும் தன்மை கொண்டது. எனவே கடந்த காலத்தில் செய்த செயல்கள் அல்லது மேற்கொண்ட முடிவுகளின் அடிப்படையில் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் காயப்படுத்தக்கூடாது என்று இருவரும் ஒருவருக்கொருவர் உறுதிமொழியும் மேற்கொள்ளலாம்.
விட்டுக்கொடுப்பதை பற்றி வருத்தப்படக் கூடாது : உறவுகளில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் விட்டு கொடுத்து போவது உறவை அழகாக்கும். அந்தசமயத்தில் இருவருமே விட்டுக் கொடுக்கும் பொழுது, அதை பற்றி வருத்தப்படக் கூடாது. உறவு நீண்ட காலம் நீடிப்பதற்கு விட்டுக் கொடுப்பது ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.