துணையின்றி தவிக்கும் சிங்கிள்கள் ஒரு கிளிக்கில் உலகில் எங்கு சிங்கிளாக இருக்கும் எதிர்பாலினத்தவருடனும் மிங்கிளாக நொடியில் உதவுகின்றன ஆன்லைன் டேட்டிங் பிளாட்ஃபார்ம்கள். பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் டேட்டிங்கை பயன்படுத்தும் போக்கு மறைந்து தங்கள் வாழ்க்கை துணையை தேர்வு செய்ய ஆன்லைன் டேட்டிங்கை அதிகம் பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள் யூஸர்கள்.
ஆன்லைன் டேட்டிங் பிளாட்ஃபார்ம்கள் ரெஜிஸ்டர்ட் செய்பவரின் டேட்டாக்களை பராமரிக்கின்றன. மேலும் இந்த பிளாட்ஃபார்ம்களில் பெரும்பாலானவை சந்தா அடிப்படையில் இயங்குகின்றன. எளிய டிவைஸ்கள் மூலம் வீட்டிலிருந்தே பல புதிய நபர்களை பற்றி தெரிந்து கொள்வதை இவை எளிதாக்கி இருக்கின்றன. உங்களுக்கு ஆன்லைன் டேட்டிங் குறித்த குழப்பங்கள் அல்லது தயக்கங்கள் இருக்கலாம். ஏன் நீங்கள் ஆன்லைன் டேட்டிங் பிளாட்ஃபார்ம்களை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
அதிகமான மக்களை சந்திக்கலாம் : டேட்டிங் ஆப்ஸ்கள் உங்களுக்கு பொருத்தமான ஒரு மேட்சிங் ப்ரொஃபைலுடன் உங்களை கனெக்ட் செய்ய ஆயிரக்கணக்கான ப்ரொஃபைல்ஸை ஸ்கேன் செய்கிறது. இதன் மூலம் நீங்கள் ஆயிரக்கணக்கான நபர்களை ஆன்லைனில் மீட் & மேட்ச் செய்ய முடியும். உங்கள் நம்பிக்கைகள் அல்லது கலாச்சாரத்தை மதிக்க தெரிந்த மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களிடம் பேசி பழக வாய்ப்புகள் கிடைக்கும்.
ஃபில்ட்டர்ஸ் : உங்களுக்கு குறிப்பிட்ட வயதிற்குள் தான் மேட்ச் வேண்டும் என்பது உள்ளிட்ட பிற காரணிகளை நீங்கள் ஃபில்ட்டர் ஆப்ஷன் மூலம் செயல்படுத்தி கொள்ளலாம். நீங்கள் கனெக்ட்டாக விரும்பும் ப்ரொஃபைல்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் முழு கட்டுப்பாட்டையும் டேட்டிங் ஆப்ஸ்கள் வழங்குகின்றன.
வெளிப்படைத்தன்மை : நேரடியாக டேட்டிங் செல்லும் போது தங்கள் மனதில் இருக்கும் முக்கிய கேள்விகள் ஆழ்ந்து தங்களுக்கு தேவையான விஷயங்களை கேட்பதில் பாலரும் தயக்கம் காட்டுகிறார்கள். அதுவே ஆன்லைன் டேட்டிங் என்றால் ஒருவர் மிக வெளிப்படையாக கேட்க நினைப்பதை தனது மேட்ச்-சிடம் கேட்கலாம். உதாரணமாக திருமணத்தில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?, உங்களுக்கு குழந்தைகள் பெற்று கொள்ள ஆசையா.? என்பன போன்ற கேள்விகளை துவக்கத்திலேயே கேட்டு உங்களுக்கு திருப்தி என்றால் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகலாம்.
வசதிகள் : உங்களுக்கு விருப்பமானவர்களுடன் டேட்டிங் செய்ய நேரில் சென்றால் கஃபே & ரெஸ்டாரன்ட் என அதிகம் பணம் செலவழிக்க வேண்டியிருக்கலாம். ஆனால் ஆன்லைனில் இந்த பிரச்சனை இல்லை. ஒரு ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் மற்றும் நெட் கனெக்ஷன் இருந்தால் போதும். மேலும் உங்களுக்கு யாராவது தொல்லை கொடுத்தால் உடனடியாக அந்த யூஸரை block செய்து விடலாம்.
வேகம் : நேரில் டேட்டிங் சென்றால் முதல் முறையாக சந்திக்க போகிறோம் எங்கே சந்திப்பது, என்ன மாதிரியான உடை அணிவது, எப்படி பேசுவது என்ற பல குழப்பங்கள் இருக்கலாம். முதல் சந்திப்பிலேயே வேகம் காட்ட முடியாது, படிப்படியாக பேசி தான் உறவை பலப்படுத்த முடியும். ஆனால் ஆன்லைன் டேட்டிங்கில் உறவின் வேகத்தை நீங்கள் அமைக்கலாம்.