

ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவதெல்லாம் காதலர் தினம். இந்த தினத்தில் ஒருவர் தான் விரும்பிய பெண்ணிடம் காதலை தெரிவிப்பர். உலகம் முழுவதும் இந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் சிகப்பு ரோஜாக்களின் விற்பனை அமோகமாக இருக்கும். ஏனெனில், அது காதலின் ஒரு சின்னம். இதுதவிர, கிரீட்டிங் கார்டு, சாக்லேட், காதலை குறிக்கும் வேறு சின்னங்களும் இந்த நாளில் பரிசாக வழங்குவது வழக்கம்.


அந்த வகையில், இந்தாண்டு நீங்கள் ஏன் வித்தியாசமான பரிசை உங்கள் காதலன் அல்லது காதலிக்கு தரக்கூடாது. அதுவும் பயணத்தை அதிகம் விரும்பும் நபர்களுக்கு இந்த செய்திக்குறிப்பு கட்டாயம் உதவியாக இருக்கும். ஏனெனில், உலகின் பல இடங்கள் அல்லது நாட்டின் பல இடங்களுக்கு பயணம் செய்வதை இப்போதைய சந்ததியினர் அதிகம் விரும்புகின்றனர். அவர்களுக்கு நீங்கள் தரும் அற்புதமான மற்றும் தனித்துவமான பரிசுகள் மூலம் உங்கள் காதலை எங்கு சென்றாலும் நினைவுக்கூர முடியும். அந்த வகையில் நீங்கள் உங்கள் ட்ராவல் பார்ட்னர்க்கு கொடுக்க வேண்டிய காதலர் தின பரிசுகளை கீழே காணலாம்.


ஸ்போர்ட்ஸ் கேமராக்கள் (Sports cameras) : பயணம் என்பது ஒரு ஜோடியாக நீங்கள் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம் என்றால், GoPro போன்ற ஸ்போர்ட்ஸ் கேமராக்கள் ஒரு அற்புதமான பரிசு விருப்பத்தை உருவாக்குகின்றன. இந்த அணியக்கூடிய மற்றும் கியர்-மவுண்டபிள் கேமராக்கள் ட்ரெக்கிங், பைக் ரெய்டு, கடலில் டைவிங் போன்ற விஷயங்களில் ஈடுபடும்போது அந்த அழகிய தருணங்களை பதிவு செய்ய உதவியாக இருக்கும்.


போர்ட்டபிள் டென்ட் (Portable tent) : ஒரு ஜோடியாக நீங்கள் காடுகளில் அல்லது மலைகளில் முகாமிடுவதை ரசிக்கிறீர்கள் என்றால், ஒரு சிறிய தங்கும் கூடாரத்தை விட சிறந்த காதலர் தின பரிசு வேறு இருக்க முடியாது. வானிலை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் எங்கும் கொண்டு செல்லக்கூடிய காலநிலை கட்டுப்பாட்டு டென்ட் ஒன்றை வாங்கி பரிசளியுங்கள். உங்களின் இந்த சிந்தனைக்காக அவர்கள் நிச்சயமாக உங்களை அதிகமாக நேசிப்பார்கள்.


ஒரு ட்ராவல் பேக் (A sturdy backpack) : பயணம் செய்ய விரும்பும் ஒருவருக்கு நீங்கள் பரிசுகளை வழங்கும்போது, பேக் பேக் உங்களின் முதல் தேர்வாக இருக்க வேண்டும். இந்த காதலர் தினத்தில், கூடுதல் ஜிப்கள் மற்றும் பாக்கெட்டுகளுடன் கொண்ட ஒரு மேம்பட்ட ட்ராவல் பேக்கை பரிசளியுங்கள். சில பேக்குகள் மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளுக்கான சோலார் பேனல்களுடன் கிடைக்கிறது. இதனால் உங்கள் காதலர் எங்கு சென்றாலும் தொடர்ந்து உங்களுடன் இணைந்திருக்க முடியும்.


ட்ராவல் ஸ்க்ராச் மேப் (Travel scratch map) : இது உங்கள் பயணங்களை ஒரு ஜோடியாக கண்காணிக்கும். நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இரு நாடுகளையும், கொடிகளையும் ஸ்க்ராச் செய்துவிட்டு, உங்கள் அடுத்த கனவு இலக்கை அதில் குறிக்கலாம்.


ஸ்லீப்பிங் மாஸ்க் (Sleep masks) : பயணம் பெரும்பாலும் வேடிக்கையாக இருந்தாலும், அந்த பொழுதுபோக்கு காரணமாக உங்களுக்கு சோர்வு ஏற்படலாம். இது போன்ற பயணங்களில் ஒருவரின் தூக்கம் என்பது ரயில்களிலோ அல்லது விமானங்களிலோ உள்ளன. இங்கு தான் ஸ்லீப்பிங் மாஸ்க்கின் தேவை அதிகரிக்கிறது. அவற்றைப் போட்டு உடனடியாக தூங்குங்கள். இந்த முகமூடிகளை ஆர்டர் செய்ய பல வலைத்தளங்கள் உள்ளன. மேலும் அவற்றை நீங்களே கூட தயாரித்து உங்கள் காதலருக்கு கொடுக்கலாம்