முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

உங்கள் தாய்க்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கித்தான் பரிசளிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் நீங்களே சின்ன, சின்ன பொருட்களை தயாரித்து அதை பரிசளிக்கலாம்.

  • 19

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    குழந்தைகளுக்காகவே தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ள அன்னையர்களை சிறப்பிக்கும் தினம் மே 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினத்தை பசுமையான நினைவுகளால் நிரப்பி உங்கள் தாயை நீங்கள் மகிழ்விக்கலாம். என்ன செய்வதென்ற யோசனை சட்டென்று தோன்றவில்லையா?

    MORE
    GALLERIES

  • 29

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    கவலையை விடுங்கள். உங்கள் தாயை மகிழ்விக்க என்னென்ன செய்ய முடியும் என்ற பட்டியல் கீழே இருக்கிறது. இதில் உங்களுக்கு சௌகரியமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 39

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    ரெஸ்டாரண்ட் அழைத்துச் செல்லலாம் : ஒவ்வொரு நாளும் உங்கள் வாய்க்கு ருசியாக சமைத்துப் போடும் அம்மாவுக்கு நீங்கள் அறுசுவை விருந்து கொடுக்க அன்னையர் தினத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தாய் மற்றும் குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று, அவர்களுக்கு பிடித்தமான ரெஸ்டாரண்டில் விருந்து சாப்பிடலாம். அங்கு உணவு மட்டுமல்லாமல் அன்பும் பரிமாறப்படுவது உறுதி.

    MORE
    GALLERIES

  • 49

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    வேலைகளில் இருந்து விடுதலை : பணியில் இருப்பவர்களுக்கு சனி, ஞாயிறு என்று விடுமுறை கிடைக்கும். ஆனால், ஒட்டுமொத்த வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட தாய்க்கு விடுமுறை என்பதே இருக்காது. ஆனால், அன்னையர் தினத்தில் அவர்களுக்கு வீட்டுப் பணிகள் உள்ளிட்ட அனைத்து கடமைகளில் இருந்தும் சற்று ஒய்வு கொடுக்கலாம். இன்றைய தினம் திரைப்படம், பூங்கா உள்ளிட்ட புத்துணர்ச்சி நடவடிக்கைகளில் அவர்களை பங்குபெறச் செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 59

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    வீட்டில் தயாராகும் கிஃப்ட் கார்டுகள் : உங்கள் தாய்க்கு விலை உயர்ந்த பொருட்களை வாங்கித்தான் பரிசளிக்க வேண்டும் என்பதில்லை. வீட்டில் நீங்களே சின்ன, சின்ன பொருட்களை தயாரித்து அதை பரிசளிக்கலாம். எதுவுமே இல்லையா? உங்கள் தாய் தினசரி செய்யக் கூடிய வேலைகளை நீங்களே செய்து கொடுப்பதும் கூட ஒரு பரிசுதான்.

    MORE
    GALLERIES

  • 69

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    ஃபோட்டோசூட் : பசுமையான நினைவுகளை சேகரிப்பது என்றால் அதில் ஃபோட்டோசூட் இல்லாமல் இருக்க முடியுமா? அழகான பூங்கா, கடற்கரை போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று உங்கள் தாயுடன் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம். அன்புக்குரிய அம்மாவுடன் செல்ஃபி என்ற ஹேஷ்டேக்குடன் அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

    MORE
    GALLERIES

  • 79

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    நகை பரிசளிப்பு : பெண்கள் என்றாலே தங்க நகை மீது அலாதி பிரியம் கொண்டிருப்பார்கள். உங்கள் தாய் மட்டும் இதில் விதிவிலக்கு கிடையாது. இன்றைய தினம் மோதிரம், நெக்ளஸ், தோடு என்று உங்கள் வசதிக்கேற்ற நகையை வாங்கி உங்கள் தாய்க்கு பரிசளிக்கலாம். இதைச் செய்யும்போது, “என் குழந்தை தங்கமான பிள்ளை’’ என்று உங்கள் தாய் கொண்டாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    MORE
    GALLERIES

  • 89

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    கடிதம் எழுதுங்கள் : தினந்தோறும் வீட்டில் பார்க்கும் அதே அம்மா, வெளியிடங்களுக்குச் சென்றால் கூட நொடிப்பொழுதில் தொடர்பு கொள்ள செல்ஃபோன், நினைவுகளை பகிர்ந்து கொள்ள சமூக வலைதளங்கள் என எத்தனையோ மாற்றங்கள் வந்திருதாலும், நம் கைப்பட எழுதும் கடிதத்திற்கு ஈடு, இணை எதுவுமே கிடையாது. உங்கள் அன்பை வார்த்தைகளில் கொட்டி கொடுங்கள்.

    MORE
    GALLERIES

  • 99

    Mother's Day 2023: அன்னையர் தினத்தில் உங்க அம்மாவை மகிழ்விக்கும் சூப்பர் ஐடியாஸ்..!

    மறக்க முடியா அனுபவம் : அன்னையர் தினத்தை மறக்க முடியா அனுபவமாக மாற்றுவதற்கு என்ன செய்ய முடியும் என்று நீங்களே திட்டமிடுங்கள். நீண்ட தொலைவுக்கு கார் பயணம் அல்லது பைக் பயணமாக செல்லலாம். உங்கள் தாய்க்கு அழகான ஆடைகளை வாங்கி பரிசளிக்கலாம். அருகாமையில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லலாம். உங்களுக்கு பிடித்தமான விஷயத்தை செய்து, அதை பசுமையான நினைவுகளாக மாற்றுங்கள்.

    MORE
    GALLERIES