உங்கள் தாய்க்கு சரியான கிஃப்ட்டை செலக்ட் செய்வது உங்களுக்கு ஒரு கடினமான பணியாக இருக்கலாம். வரும் அன்னையர் தினத்தில் உங்கள் தாய்க்கு நீங்கள் கிஃப்ட் வழங்குவதற்கான யோசனைகளை இங்கே பார்க்கலாம். இதன் மூலம் சரியான கிஃப்ட்டை கொடுத்து உங்கள் அம்மாவை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.
ஹேண்ட்மேட் கிரீட்டிங் கார்ட்ஸ் : உங்கள் தாய் மீதான பாசத்தை வெளிப்படுத்த அன்னையர் தினத்தன்று உங்கள் கைகளால் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டையை அவருக்கு கிஃப்ட்டாக கொடுப்பது சிறந்த ஐடியாவாக இருக்கும். அந்த கார்டில் உங்கள் தாய்க்காக நீங்கள் உங்கள் சொந்த சிந்தனையில் உருவான கவிதைகளை எழுதி கொடுக்கலாம்.
வாசனை மெழுகுவர்த்திகள்: வீட்டில் இருக்கும் பெரும்பாலான நேரம் வேலைகளில் கவனம் செலுத்தும் உங்கள் தாயின் மனதிற்கு அமைதியான மற்றும் நிதானமான சூழலை உருவாக்க நீங்கள் அவருக்கு வாசனை மெழுகுவர்த்திகளை வாங்கி பரிசளிக்கலாம். உங்களால் தாய்க்கு பிடித்தமான வாசனையை தேர்வு செய்து அதற்கேற்ப Scented Candles பரிசளிக்கலாம்.