வரும் மே 8 அன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட உள்ளது. உங்களில் பலர் உங்கள் அம்மாக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க பிளான் செய்வதன் மூலமோ அல்லது கிஃப்ட் கொடுக்க பிளான் செய்வதன் மூலமோ அன்னையர் தினத்தை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருப்பீர்கள். பலர் அன்னையர் தினத்தன்று அம்மாவை அசத்த என்ன செய்யலாம் என்று திட்டமிடாமல் இருப்பீர்கள். இதற்காக கடைசி நிமிடம் வரை காத்திருப்பதற்குப் பதிலாக கீழ்காண்பவற்றில் ஏதாவது ஒன்றை உங்கள் அம்மாவுக்காக செய்ய நீங்கள் திட்டமிடலாம். அன்னையர் தினத்தில் உங்கள் தாயை ஆச்சரியப்படுத்தும் வகையில் நீங்கள் திட்டமிட கூடிய அர்த்தமுள்ள சில செயல்பாடுகளை இப்போது பார்க்கலாம்..
கார்டனிங் : உங்கள் தாய்க்கு கார்டனிங் பிடிக்கும் என்றால் உங்கள் வீட்டு கார்டனை இன்னும் அழகாக்குவதை விட சிறந்த பரிசு அவருக்கு வேறு எதுவும் இல்லை. அன்னையர் தினத்தில் உங்கள் தாய்க்கு ஒரு புதிய பூச்செடி அல்லது மூலிகை மர கன்றுகளை பரிசாக வழங்குவதன் மூலம் நாளை சிறப்பாக்கலாம். அவருக்கான நாளை நீங்கள் மிகவும் முழுமையானதாக மாற்றி உள்ளீர்கள் என்பதை நீங்கள் வாங்கி கொடுத்த தாவரங்கள் பூக்கும் போது அவர் முகத்தில் வெளிப்படும் மகிழ்ச்சி உணர்த்தும். மேலும் உங்கள் தாயுடன் அன்று முழுவதும் தோட்டத்தை அழுகுபடுத்துவதிலும் நேரத்தை திட்டமிடலாம்.
மசாஜ் செஷன் : நாம் எல்லோரும் ஓய்வெடுக்க ஓயாமல் உழைக்கும் ஜீவனாக ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள் அம்மாக்கள். அவர்களுக்கு அமைதியான மற்றும் நிம்மதியான ஓய்வை அளிக்க ஸ்பா மற்றும் மசாஜ் செஷன்களை புக் செய்து அழைத்து செல்லலாம். இதனை உடல் மட்டுமல்ல அவர்களது மனமும் புத்துணர்ச்சி அடைந்து அன்றைய நாளை மறக்க முடியாததாக மாற்றும்.
அவர்களின் பொழுதுபோக்கு : நம் தாய்மார்கள் நாள் முழுவதும் தங்கள் அலுவலகம் அல்லது வீட்டு வேலையிலேயே பிஸியாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் நம்மை போலவே நடனம், பாட்டு, யோகா, இசைக்கருவி வாசித்தல் போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் இருக்கும். ஆனால் நம்மை கவனித்து கொள்வதால் அவர்களுக்கு அவர்களால் செய்து கொள்ள முடிவதில்லை.
எனவே உங்கள் தாயின் நீண்டகால விருப்பங்கள் அல்லது அவர்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு என்னவென்பது உங்களுக்கு தெரிந்தால், அதை அவர்கள் செய்வதற்கான வாய்ப்புகளை இந்த அன்னையர் தினத்தில் ஏற்படுத்தி கொடுங்கள். இதற்காக ஒரு ஆன்லைன் கிளாஸில் அவர்களை சேர்த்து விட்டாலும் சரி, மொபைலில் அதற்கான ஆப்ஸ்களை டவுன்லோட் செய்து கொடுத்தாலும் சரி.. அது அவர்களின் முகத்தில் நிச்சயம் புன்னகையை வரவழைக்கும்.
கேம் அல்லது மூவி நைட் : உங்கள் குடும்பத்தை ஒன்று திரட்டி ஒரு நல்ல விளையாட்டு நேரத்திற்கு ஏற்பாடு செய்யலாம். அதில் உங்கள் அம்மாவிற்கு பிடித்த விளையாட்டுகளை சேர்த்து அவர்களை சந்தோஷமாக விளையாட வைக்கலாம். அதே போல இரவு உணவை ஒரு திரைப்படம் பார்த்து விட்டோ அல்லது, இரவு உணவை முடித்த பிறகு குடும்பத்துடன் உங்கள் அம்மா விரும்பும் திரைப்படத்திற்கு அழைத்து செல்வதன் மூலம் அவரை மகிழ்விக்கலாம்.
இயற்கை சூழலில் வெளியே : உங்கள் அம்மா இயற்கையாக நேசிப்பவராக இருந்தால், வெளியே சென்று அதை நுபவிக்கும் அளவிற்கு நீரால் இல்லாதவராக இருந்தால் அன்னையர் தினத்தன்று ஒரு ஸ்பெஷல் ட்ரிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். இது அவர் இயற்கையின் மத்தியில் ஓய்வெடுக்கவும் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நன்றாக நேரத்தை செலவிட உதவும்.
விருப்பமான ஸ்பாட் : உங்கள் தாய்க்கென்று பிடித்த இடங்கள் ஏராளமாக இருக்க கூடும். அவருக்கு மிகவும் பிடித்தமான இடங்கள் எதுவென்று உங்களுக்கு தெரியுமானால் அல்லது அவர் நீண்ட நாட்களாக போக வேண்டும் என்று சல்லி கொண்டிருக்கும் இடங்கள் உங்களுக்கு தெரிந்தால் சற்றும் யோசிக்காமல் அந்த இடங்களுக்கு அன்னையர் தினத்தில் கூடி சென்று அசத்துங்கள். இன்னும் சொல்ல போனால் எங்கே கூட்டி கொண்டு செல்கிறீர்கள் என்பதை சொல்லாமல், போகும் வழியில் அவரே தெரிந்து கொண்டு சர்ப்ரைஸ் ஆனால் அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார்.
சமையலில் உதவுங்கள் : நீங்கள் இதுவரை உங்கள் தாய்க்கு கிச்சனில் உதவியதில்லை என்றால், இந்த அன்னையர் தினத்தில் நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அவருடன் சேர்ந்து சமையலுக்கு உதவுவது தான். அதுமட்டுமின்றி உங்கள் கைகளால் நீங்கள் அவருக்காக ஸ்பெஷல் டிஷ் செய்து கொடுத்தால் அதுவே போதும் அன்னையர் தினத்தை அவருக்கு சிறப்பானதாக மாற்ற..