உடலுறவின் போது பெண்களை விட ஆண்களுக்குத்தான் மகிழ்ச்சி அதிகமாக இருக்குமாம்..! ஏன் தெரியுமா..?
பாலியல் உறவில் ஒருவருக்கு முழு ஈடுபாடு இருந்தாலும் கூட மற்றவர் ஏதேனும் பிரச்சனைக்கு உள்ளாகும் போது அவரால் இயல்பாகவோ, விருப்பத்துடனோ ஈடுபட முடியாமல் போகிறது.
Web Desk | December 17, 2020, 8:02 PM IST
1/ 7
பலரும் தெரிந்து கொள்ள விரும்பும் உலகளாவிய கேள்வி இது. படுக்கையிலும் உறவிலும் உங்கள் திருப்தி அல்லது இன்பத்தைப் பெற, உங்கள் பங்குதாரர் என்ன விரும்புகிறார் என்பதை அறிந்து கொள்வது அவசியம். உரையாடல்கள், மூலம் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவிடுவது கூட்டாளர்கள் ஒருவருக்கொருவரை பற்றி நன்றாக தெரிந்துகொள்ள உதவும். இது சம்பந்தமாக தற்போது வெளியாகியுள்ள ஒரு ஆய்வு ஒன்று படுக்கை அறையில் பெண்களை விட ஆண்கள் நாட்டம் அல்லது விருப்பம் குறைவாக உணர்வதாக அந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
2/ 7
ஆணும், பெண்ணும் இணையும் உறவில் இன்னும் வெளிப்படையான பேச்சுகள் சமூகத்தில் உருவாகவில்லை. குறிப்பாக பெண்கள் தன் துணையுடன் தங்கள் அந்தரங்க உறுப்பு குறித்த பகிர்தலை கூட இயல்பாக மட்டுமல்ல பிரச்சனை காலங்களிலும் வெளிப்படுத்துவதில்லை. இதனால் உடல் ரீதியிலான பல ஆரோக்கிய குறைபாட்டை சந்தித்தாலும் கூடவே துணையின் அன்பையும் அரவணப்பையும் கூட பெறமுடிவதில்லை.
3/ 7
"எந்த ஐந்து சொற்களை நீங்கள் 'மகிழ்ச்சியுடன்' அதிகம் தொடர்புபடுத்துகிறீர்கள்?” (“Which five words do you associate most with ‘happiness’?”) என்ற கேள்வியை, 15 முதல் 60 வயதிற்குட்பட்ட 665 ஆண்கள் மற்றும் 482 பெண்களைக் கண்காணிக்கும் 'ட்ராக்கிங் ஹப்பினஸ்' (Tracking Happiness’) என்ற ஆய்வு தனது ஆய்வுக்கான பங்கேற்பாளர்களிடம் கேட்டது. இதற்கு, கணக்கெடுக்கப்பட்டவர்கள் திருப்தி, அன்பு, செல்வம், அறிவொளி மற்றும் உடலுறவு (satisfaction, love, wealth, enlightenment and sex) போன்ற 15 வார்த்தைகளை உள்ளடக்கியவற்றிலிருந்து ஐந்தை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிபந்தனையையும் அவர்களுக்கு ஆய்வுக் குழு வழங்கியது.
4/ 7
கணக்கெடுப்பை நடத்துபவர்கள், வெவ்வேறு குழுக்கள் மகிழ்ச்சியுடன் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களை அவர்கள் தொடர்புபடுத்துவார்கள் என்பதைக் கண்டுபிடிக்க விரும்பியது. மகிழ்ச்சியை விவரிக்க “செக்ஸ்” என்ற வார்த்தையை, ஆண்களில் பதிலளித்தவர்கள் 20% பேரும், பெண்களில் 8% பேரும் அதே வார்த்தையை தேர்ந்தெடுத்தனர் என்றது ஆய்வுக்குழு. ஆகவே, உடலுறவின் போது ஆண்கள், பெண்களை விட மகிழ்ச்சியுடன் இருப்பதை எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள் என்பதை அறிய கீழே உள்ள ஆய்வை படித்து அறிந்துகொள்ளலாம்.
5/ 7
சைக்காலஜி டுடே (Psychology Today) பரிந்துரைத்த ஒரு ஆய்வில் , உடலுறவின் போது பெண்கள் புணர்ச்சியைப் பெறுவது குறைவு என்று குறிப்பிட்டுள்ளது, இது இரு பாலினங்களுக்கும் இடையிலான பிளவுகளை விளக்கக்கூடும். அந்த கணக்கெடுப்பு 24,000 கல்லூரி வயதுடைய பெண்களிடம் நடத்தியது அதில், 40% பேர் உடலுறவின் போது க்ளைமாக்ஸ்ஸிலும், 80% தங்களது ஆண் சகாக்களின் செயலினால் மகிழ்ச்சியை பெற்றதாக வெளிப்படுத்தினர். ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்கள் உடலுறவின் போது அவர்களுக்கு புணர்ச்சி உணர்வு பாதிதான் ஏற்படுவதாக இந்த முடிவு தெரிவிக்கிறது.
6/ 7
மேலும் சைகாலஜி டுடே (Psychology Today) அறிக்கை, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு டேட்டிங் அனுபவம் இத்தகைய வாய்ப்புகளை வழங்குவதாக தெரிவித்தது. அதோடு பெண்கள், ஆண்களைப் போலல்லாமல், சாதாரண உடலுறவில் ஈடுபடும்போது, அவர்கள் சற்றே தயங்குவதாகவும் கூறியுள்ளது. இந்நிலையில் பாலியல் உறவில் ஒருவருக்கு முழு ஈடுபாடு இருந்தாலும் கூட மற்றவர் ஏதேனும் பிரச்சனைக்கு உள்ளாகும் போது அவரால் இயல்பாகவோ, விருப்பத்துடனோ ஈடுபட முடியாமல் போகிறது. இதனால் ஒவ்வொருவரும் தங்களின் ஆயுள் காலத்தில் உறவு என்னும் பொன்னான காலத்தை இழந்துவிடுகிறார்கள்.
7/ 7
இன்று பெரும்பாலான ஆண்கள், பெண்கள் இருவருமே மனதுக்குள் உறவுக்கு ஆசைபட்டாலும் கூட உறவின் போது மகிழ்ச்சியடையவில்லை என்றே தெரிவிக்கிறார்கள். அது ஒருபுறமிருக்க மேற்சொன்ன ஆய்வு மகிழ்ச்சியின் உண்மைத்தன்மையை பளிச்சென்று விவரித்துள்ளது. நாம் இருக்கும் சமூகம் உடலுறவு குறித்தவற்றை வெளிப்படையாக பேசத் தயங்கும். இது போன்ற ஆய்வுகள் மூலம் தான் உண்மைகள் வெளி உலகிற்கு தெரிய வருகிறது.