தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் சுவாரஸ்யத்தோடு பேசப்பட்டு வந்த, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா திருமணத்தைப் போலவே கடந்த ஏப்ரல் மாதத்தில் மணம் முடித்தவர்கள் தான் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் நடிகை அலியா பட் ஜோடி ஆகும்.ஹிந்தி திரையுலக நட்சத்திரங்களான இவர்கள் சுமார் 5 ஆண்டு கால காதலுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் என்பது, மும்பையில் உள்ள வீட்டில் அவர்களுக்கு பிடித்தமான பால்கனி பகுதியிலேயே நடத்தி முடிக்கப்பட்டது. இந்த ஜோடியின் காதல் வாழ்க்கை மற்றும் திருமணத்தில் இருந்து நாம் சில முக்கியமான விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும்.