பொதுவாக நம் வாழ்க்கையில் எந்த ஒரு செயல் நடந்தாலும், அதன் விளைவை பற்றி பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை. அந்த செயல் நடந்து முடிந்த பிறகு அதனால் ஏற்பட கூடிய நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவை கொண்டே அதை மீண்டும் செய்யலாமா, செய்ய கூடாதா என்பதை முடிவெடுப்போம். இது நம் வாழ்க்கையில் செய்ய கூடிய எல்லாவற்றிற்கும் பொருந்தும். குறிப்பாக இது போன்ற விஷயங்களை நாம் தாமதமாக தான் உணர்ந்து கொள்வோம். இதை பற்றி மேலும் விரிவாக இனி தெரிந்து கொள்வோம்.
உழைப்பு : நீங்கள் வாழ்க்கையில் ஒன்றை அடைய விரும்பினால், அதற்காக கடினமாக உழைக்க வேண்டும். மற்றவர்களை காட்டிலும் 10 மடங்கு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக, பலநாள் இரவு தூக்கங்களை தியாகம் செய்ய வேண்டும். இப்படி கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒருவரால் வாழ்க்கையில் முன்னேற முடியும். இதை பொதுவாகவே நம்மில் பலர் மிக தாமதமாகவே உணர்கிறோம்.
பயம் : நீங்கள் எதையாவது கண்டு பயப்படும் போதெல்லாம், நீங்கள் அதை அதிகமாக வெறுக்கத் தொடங்குவீர்கள் என்று அர்த்தம். இதன் பின்னர் விரக்தி, கோபம், மனக்கசப்பு போன்றவை மனதில் உண்டாகும். உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் பயத்தை விரட்டினால் மட்டுமே, நீங்கள் வாழ்வில் உயர முடியும். மேலும் வாழ்க்கையில் முன்னேற இது மிக அவசியமாகும்.
பயிற்சி முக்கியம் : நாம் நினைத்தை சாதிக்க ஒரு நாள், இரு நாள் பயிற்சி மட்டும் போதாது. இதற்கு நீண்ட கால கடுமையான பயிற்சிகள் தேவைப்படும். எந்த ஒரு விஷயத்தையும் பயிற்சி இல்லாமல் நம்மால் செய்ய முடியாது. அவ்வாறு செய்தால், அதில் பல தோல்விகள் நம்மை வந்து சேரும். எனவே உங்களுக்குள் உள்ள அழுத்தத்தை நீக்கி கடுமையான பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உங்கள் வாழ்க்கையை பிரகாசமாக்க உதவும்.
வாழ்க்கை சமநிலை : ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்ய கூடிய செயல்களுக்குப் பின்னால் ஒரு உள்நோக்கம் மறைந்திருக்க கூடும். உங்களுக்கு பல கஷ்டங்கள் தர நிறைய பேர் இருந்தாலும், உங்களை நீங்களே தைரியமாக்கி கொள்ள வேண்டும். ஆனால் உணர்ச்சிகளை சமநிலைப்படுத்துவதற்கு இதை பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், அப்போது தான் வாழ்க்கை உங்களுக்கு சுமுகமாக இருக்கும்.
அனுபவங்கள் : வாழ்க்கையில் பலவற்றை நாம் தாமதமாக உணர்ந்து கொள்ள நமது அனுபவம் தான் உதவுகிறது. சொல்லப்போனால், அனுபவங்கள் தான் நம்மை சிறந்த மனிதர்களாக செதுக்குகிறது. வாழ்க்கையில் ஒருவருக்கு கிடைக்கும் அனுபவத்தை வைத்து தான் எப்படி முன்னேறி செல்லலாம் என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அதே போன்று யாரெல்லாம் தங்களது கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கே சிறந்த அனுபவம் கிடைக்கிறது. இதை நாம் தாமதமாக தான் புரிந்து கொள்கிறோம்.