நீங்கள் காதலில் இருக்கும் போது உங்களுடைய பார்ட்னர் முழு ஈடுபாட்டுடன் உங்களிடம் நடந்து கொள்ளாதவாறு எப்போதேனும் உணர்ந்துள்ளீர்களா? உங்களுடன் வெளியே டேட்டிங் செல்வதும், எப்போதும் போல நெருக்கமாக மகிழ்ச்சியாக இருப்பதும், உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்தாலுமே உங்கள் இருவருக்கும் உள்ள உறவை வெளியுலகிற்குக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நிலை வரும் பட்சத்தில் அதைப் பற்றிய பேச்சை உங்கள் பார்ட்னர் தவிர்க்கிறாரா? இவை அனைத்திற்கும் ஆமெனில் நீங்கள் பாக்கெட்டிங் எனப்படும் விஷயத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.
இதற்கான காரணங்கள் என்ன? பாக்கெட்டிங் பொதுவாகவே யாராலும் உளவியல் ரீதியாக ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம் தான். என்னதான் காதல் வாழ்க்கை சிறப்பாக இருந்தாலுமே தங்களைப் பற்றி விவரத்தை வெளி உலகத்திற்கு அறிவிக்கவே முடியாத அளவு ஒரு உறவு இருக்கும் எனில் அது அவருக்கு சோதனையாகவே அமையும். ஆனால் இவ்வாறு பாக்கெட்டிங் செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
கமிட்மெண்ட் பிரச்சினைகள் : ஒருவேளை உங்கள் காதல் வாழ்க்கை பற்றிய விவரத்தை குடும்பத்தாரிடமும் அல்லது மற்றவரிடமும் பகிர்ந்து கொள்ளும் போது அதன் பிறகு முழு ஈடுபாட்டையும் காதல் வாழ்க்கையில் மட்டுமே வைத்து செயல்பட வேண்டும் என்ற நிலை உண்டாகும் என்று பயத்தினால் பலர் காதல் வாழ்க்கையை ரகசியமாக வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர். மிக விரைவாக திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட விருப்பமில்லாதவர்கள் முடிந்த அளவு தங்கள் காதல் வாழ்க்கையே ரகசியமாகவே வைத்துக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் : தங்கள் காதல் விஷயத்தை பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் வெளிவரும் பட்சத்தில் அவர்கள் என்ன விதமாக நடந்து கொள்வார்கள் என்று பயமும் ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முக்கியமாக இந்தியா போன்ற நாடுகளில் ஜாதி, மதம், பொருளாதாரம் நிலை போன்ற பல்வேறு பிரச்சினைகள் காதலை தீர்மானிக்கும் காரணியாக இருக்கின்றன.
வேறு ஒருவர் மீது ஈர்ப்பு : ஒருவேளை உங்கள் பார்ட்னருக்கு உங்களைத் தவிர வேறு ஒருவர் மீது ஈர்ப்பு இருக்கலாம். இதன் காரணமாகவே ஒரு வேலை உங்களுடன் காதலில் இருப்பதைப் பற்றி மற்றவருக்கு தெரிவித்தால் அவருக்கு பிடித்த வேறொரு நபர் தன்னைப் பற்றி தவறாக நினைக்க கூடும் என்கிற காரணத்தினால் இதனை தவிர்ப்பார்கள்.
வெளியாட்களின் தலையீட்டை தவிர்க்க : சில காதலர்கள் தங்களது காதலியை பற்றி விவரங்களை மற்றவருக்கு தெரிவிக்கும் பட்சத்தில் இதைப்பற்றி அடுத்தவர்களுடன் விவாதிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். அவ்வாறு நடக்கும் பட்சத்தில் மற்றவர்களின் தலையீடு காதல் வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவே பலர் தங்களது காதலை பற்றி அறிவிக்க விரும்புவதில்லை.
உங்கள் பார்ட்னர் உங்களை பாக்கெட்டிங் செய்தால் என்ன செய்வது? உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் பாக்கெட்டிங் செய்யபடுவதாக உங்களுக்கு தோன்றினால் உங்களது பார்ட்னர் உடன் நேருக்கு நேராக ஒரு நேர்மையான விவாதத்தை மேற்கொள்வது மிகவும் நல்லது. உங்கள் காதலைப் பற்றி தங்கள் நெருங்கிய வட்டாரங்களுக்கு அவர்கள் தெரிவிக்க விரும்பவில்லை எனில் அதற்கான உண்மையான காரணத்தை அவர்களிடமே கேட்டு அறியலாம்.