

உடலுறவுக்குப் பின் சில பெண்கள் கடுமையான வலியை உணர்வார்கள். சிலர் எரிச்சல், அரிப்பு இருப்பதையும் உணரலாம். இது முதல் முறை உடலுறவு கொள்ளும்போது ஏற்பட்டால் இயல்பானது என சொல்லும் மருத்துவர்கள் இதுவே தொடர்ச்சியாக இருப்பின் சில காரணங்களை முன் வைக்கின்றனர். அவை என்னென்ன பார்க்கலாம்.


வறட்சி : பிறப்புறுப்பில் வழவழப்பான தன்மை இல்லாதபட்சத்தில் வறட்சியாக இருந்தால் உராய்வு ஏற்பட்டு வலி உண்டாக்கலாம். இதற்கு மசகு எண்ணெய் உதவும் என்கிறார்கள். இது சருமத்திற்கு வழவழப்புத் தன்மை, ஈரப்பதம் அளிக்கும்.


கரடு முரடான உடலுறவு : பெண்களின் வெஜினா என்பது மென்மையாக கையாள வேண்டிய ஒரு இடம். மிகவும் சென்சிடிவான அந்த பகுதியில் கரடுமுரடாக கையாண்டாலும் வலி, எரிச்சல் இருக்கும். இதனால் காயம் கூட உண்டாகலாம்.


அலர்ஜி : உங்களுக்கு ஆணுறை பயன்பாடு அலர்ஜியை ஏற்படுத்துவதாக இருந்தாலும் வெஜினாவில் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம்.


தொற்றுநோய் : உங்களுக்கு வெஜினாவில் தொற்று ஏற்பட்டிருந்தாலும் உடலுறவின் போது வலி உண்டாகலாம். எனவே நீங்கள் ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் கடுமையான வலியை உணர்கிறீர்கள் எனில் மருத்துவரை உடனடியாக அணுகுவது நல்லது.


ஈஸ்ட் தொற்று : பொதுவாக பெண்களின் வெஜினாவை சுத்தம் செய்து பாதுகாப்பாக பராமரிப்பது அவசியம். இல்லையெனில் பாக்டீரியா, ஈஸ்ட், பூஞ்சைகள் தொற்றை உண்டாக்கும். இதனால் கூட சில நேரங்களில் உடலுறவுக்குப் பின் எரிச்சல், அரிப்பு உண்டாகலாம்.


பாதுகாப்பு : இது போன்ற அரிப்பு , எரிச்சல், வலி என்பது எப்போதாவது வருகிறது எனில் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது அவசியம். இந்த பராமரிப்பு நீங்கள் மட்டுமல்லாது உங்கள் துணையும் சுத்தமாக பராமரிப்பது அவசியம். இதுகுறித்து நீங்களாகவே துணையிடம் கூறலாம்.