அன்பை பரிமாறிக்கொள்ள முத்தம் ஒரு சிறந்த விஷயமாகும். அதுவே காதலர்கள், கணவன் - மனைவிக்குள் என வரும் போது, முத்தமிடுவது ஒரு அழகிய கலையாக பார்க்கப்படுகிறது. நமக்கும் குறிப்பிட்ட நபருக்கும் இடையே உள்ள உறவை பொறுத்து கன்னம், நெற்றி, கைகள், உதடுகள் என முத்தமிடுவதை நாம் பிரித்து வைத்திருக்கிறோம். அன்பு, காதல், பாசம், மதிப்பு, நட்பு என பல வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடக முத்தம் அமைகிறது. அப்படிப்பட்ட முத்தத்தை நீங்கள் உங்கள் பார்ட்னர் உடன் பகிர்ந்து கொள்ளும் போது தர்ம சங்கடமான சூழ்நிலையை உருவாக்காமல் இருக்க சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
3. அவசரப்படாதீர்கள்:
துணையுடன் பழக எப்படி காலம் எடுத்துக் கொள்கிறோமோ? அப்படித்தான் அவர்களை முத்தமிடும் போதும் தேவையான காலத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ‘எல்லாத்துலையும் அவசரம் தான்’ என உங்கள் துணை கேலி பேசும் அளவுக்கு நடந்து கொள்ளாதீர்கள். பேரின்பத்தின் திறவுகோலாகவும், சிற்றின்பத்தின் முதன்மையாகவும் இருக்கும் முத்தத்தை தொடங்கும் முன்பு, கன்னங்களை வருடிக்கொடுப்பது, செல்லமாக சீண்டுவது, மெல்ல, மெல்ல தொடுவது போன் மென்மையான நடவடிக்கைகளில் இருந்து தொடங்குங்கள்.
4. முத்தத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்:
நீங்கள் முத்தமிட ஆரம்பித்தவுடன், உங்கள் எண்ணங்கள் ‘எங்கேங்கோ.. எங்கேங்கோ’ என கீதம் பாடிக்கொண்டே வேறு வழிகளில் பாயலாம். ஆனால் மனதை அலைபாய விடாமல், செய்து கொண்டிருக்கும் வேலையில் மட்டுமே கண்ணாய் இருப்பது மிகவும் முக்கியமானது. முத்தமிடும் போது நீங்கள் முத்தமிடும் நபரின் முகம், உதடுகள், பாசம், அன்பு, ஆகியவற்றை தவிர வேறு எதுக்கும் இடம் கொடுக்காதீர்கள். ஆசை மனைவி அல்லது காதலியை முத்தமிட்டு கொண்டிருக்கும் போது, இரவு என்ன உணவு சாப்பிடலாம் என்பது போன்ற தேவையில்லாத யோசனைகளை தவிருங்கள்.
5. முத்தம் உதடுகளைப் பற்றியது மட்டுமல்ல:
முத்தமிடுதல் என்பது இரண்டு உதடுகளின் இணைவு மட்டுமல்ல, இரு இதயங்களின் இணைப்பு ஆகும். எனவே முத்தமிடும் போது உங்கள் உதடுகளால், துணையின் உதட்டை பற்றிக்கொண்டு கைகளை தொங்கப்போட்டுக் கொண்டு நிற்காதீர்கள். உங்கள் கைகள் துணையின் உடலை இறுக்கமாக பற்றி இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு இடையே காதல், அன்பு, பாசம், நெருக்கம் ஆகியவற்றை அதிகரிக்க உதவும்.