தாய் தரும் பாச முத்தம் துவங்கி தாரத்திடம் பெறும் காம முத்தம் வரை, வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் நமக்கு பாச பிணைப்பை உணர்த்தும் ஒன்றாக உள்ளது முத்தம். திருமண அல்லது காதல் வாழ்வில் துணையிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் எளிய வழிகளில் அற்புதமான ஒன்று முத்தம். அதிலும் பார்ட்னர்களுக்குள் கொடுத்து கொள்ளும் லிப்லாக் முத்தமான உதட்டோடு உதடு வைத்து கொடுத்து கொள்ளும் முத்தம். இது உயிரை விட மேலாக ஒருவர் மற்றொருவரை நேசிப்பதை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் உள்ளது.
மன அழுத்தம் குறையும் : பொதுவாக மனசோர்வு அல்லது மன அழுத்தத்தின் போது துணை தரும் பாச முத்தம் பாதி டென்ஷனை குறைத்து விடும். லிப்லாக்கின் போது மன அழுத்தம் மொத்தமும் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவியல் காரணம் என்ன தெரியுமா? மன அழுத்தத்திற்கு கார்டிசோல் என்ற ஹார்மோன் சுரப்பது காரணம். முத்தத்தை பரிமாறி கொள்ளும் போது கார்டிசோல் ஹார்மோன் சுரப்பது படிப்படியாக குறைந்தது, இதற்கு பதிலாக மனதிற்கு உற்சாகம் தரும் ஆக்ஸிடாஸின் என்ற ஹார்மோன் சுரப்பு அதிகமாகிறது.
லிப்லாக்கின் போது மூளையில் என்ன நடக்கிறது : லிப்லாக்கின் போது மூளை ஒரு ரசாயன காக்டெய்லை வெளிப்படுத்துகிறது, இது முத்தம் கொடுத்து கொள்ளும் இருவரையும் ஒருவரை ஒருவர் நன்றாக உணர உதவி செய்கிறது. லிப்லாக்கின் போது மனதை உற்சாகமாக உணர வைக்கும் ஆக்ஸிடாஸின், டோபமைன் மற்றும் செரோடோனின் உள்ளிட்ட ரசாயனங்கள் சுரக்கிறது. இது இருவருக்குமான பாசப்பிணைப்புகளை ஊக்குவிக்கிறது. ஸ்ட்ரெஸிற்கு காரணமான கார்டிசோல்அளவை உடனடியாக குறைக்கிறது.
லிப்லாக் முத்தத்தின் போது 9 மி.கி நீர், .7 மி.கி புரதம், .18 மி.கி கரிம சேர்மங்கள், .71 மி.கி வெவ்வேறு கொழுப்புகள் மற்றும் .45 மி.கி சோடியம் குளோரைடு உள்ளிட்டவை பரிமாறிக் கொள்ளப்படுகிறது முக்கியமாக முத்தங்கள் கலோரிகளை எரிக்க உதவுகின்றன. ஆழ்ந்து முத்தம் கொடுத்து கொள்ளும் போது உடலில் உள்ள சுமார் 30 தசைகள் ஒரே நேரத்தில் பயன்படுத்தப்படுவதால், நிமிடத்திற்கு சுமார் 2 முதல் 26 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.