பாலிவுட் அல்லது சினிமா பிரபலங்களின் திருமணங்கள் என்றாலே சென்சேஷனல் செய்தி தான். அதிலும் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக காதலித்து பாலிவுட் நடிகரைத் திருமணம் செய்து கொண்ட பிரபல ஸ்டாரான காத்ரீனா கைப் பலருக்கும் உதாரணமாக இருந்துள்ளார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. சீனியர் நடிகையான காத்ரீனா கைப், பாலிவுட்டில் அறிமுகமாகி சில ஆண்டுகளே ஆன விக்கி கௌஷலை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்ற தகவல் எந்த கிசுகிசு போல கூட எங்கேயும் வெளியாகவில்லை. ஒன்றாக இருக்கும் புகைப்படமோ, செய்தியோ எதுவுமே வெளிவரவில்லை. அதேபோல இவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்று செய்தி வெளிவந்தது இந்தியாவையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அது மட்டுமின்றி, திருமணமும் மிகவும் பிரைவேட்டாக வைத்திருந்தது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபின் காதல் எவ்வளவு ஸ்பெஷலானது என்று பலரும் தற்போது உணர்ந்துள்ளார்கள். நானும் பாலிவுட் நடிகை கத்ரீனா போலத்தான் என்று தங்கள் காதலை பலரும் சிலாகித்து வருகிறார்கள். இவரின் காதல் மற்றும் திருமணம் எவ்வளவு ஸ்பெஷலானது என்பதை இங்கே பார்க்கலாம்.
நானும் கத்ரீனா கைஃப் போல தான் – என்பது என்ன? கத்ரீனா கைஃப் போல தான் என்று பலரும் இங்கே குறிப்பிடுவது, தங்களின் காதலை ரகசியமாக வைத்திருப்பது தான். ஒரு சிலர், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பிரைவேட்டாகவே வைத்திருப்பார்கள். பெர்சனல் உறவுகள் என்பது எனக்கானது மட்டுமே என்பதை தான் கத்ரீனா கைஃப் போல என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். பலரும் முன்பு போல உறவுகளில் வெளிப்படையாக, பப்ளிசிட்டியை பெற விரும்பவில்லை. சில காலம் முன்பு வரை, பிரபலங்கள் யார் யாரைக் காதலிக்கிறார்கள் என்பது வெளிப்படையாகக் கூறுவார்கள்.
அது மீடியாவில், ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் கவனிக்கபப்டும். இதனால், பலருக்கும் தங்கள் உறவில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, பிரபலங்கள் தங்கள் உறவை ரகசியமாகவே வைத்திருக்க விரும்புகிறார்கள். உதாரணமாக, நடிகை அனுஷ்கா ஷர்மா மற்றும் கிரிகெட்டர் விராட் கோலி மகள் வாமிகாவை மீடியாவுக்கு அறிமுகப்படுத்த விரும்பவில்லை என்று இருவரும் இப்போது வரை தங்கள் மகளின் வாழ்வை கேமரா கண்களில் இருந்து காப்பாற்றி வருகின்றனர். தொடர்ச்சியாக தலைப்பு செய்தியில் இடம்பெறுவதைத் தவிர்க்கவும் இது உதவுகிறது. பிரபலங்களைப் பின்பற்றி பலர் தங்கள் உறவை பெர்சனலாக வைத்துள்ளனர்.
சோஷியல் மீடியாவில் உறவைப் பற்றி பகிர்வது: கிட்டத்தட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பலரும், திருமணம் ஆனவர்கள், காதலிப்பவர்கள், பிரேக்கப் ஆனவர்கள் என்று எல்லாருமே தங்களுடைய உறவைப் பற்றி சோஷியல் மீடியாவில் மிகவும் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர். திருமணமானவர்கள் தங்கள் கணவன் அல்லது மனைவி மற்றும் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்கள், சுற்றுலா செல்லும் இடங்களின் படங்கள், பரிசுகள், என்று எல்லா விவரத்தையுமே சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு பலரும் தங்கள் உறவை பற்றி, யாரை காதலிக்கிறேன், யாருடன் பிரேக் அப் ஆனது என்று எல்லா தகவல்களையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். ஒரு கட்டம் வரை இது இயல்பனாதாக இருந்தாலும், பலரும் எப்போதுமே தங்களின் உறவைப் பற்றி பகிர்வது பிரச்னைக்கு வழிவகுக்கிறது. அது மட்டுமின்றி, சோஷியல் மீடியாவில் வாழும் தம்பதிகள் தங்களுக்குள் நெருக்கத்தை மறந்து விடுகிறார்கள்.
இதைப் பற்றி நிபுணர்கள் கருத்து: பொது வெளியான சமூக வலைத்தளத்தில் அதிகமாக தங்களைப் பற்றி பகிர்வது, பிரைவசி பிரச்சனையை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பலருக்கும் உங்களைப் பற்றி தேவையற்ற தகவலை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களுடன் உங்கள் உறவை ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது, மற்றவர்களின் கருத்தை கேட்கவும் வைக்கிறது. உங்கள் கணவன் மனைவி உறவைப் பற்றி மற்றவர்கள் கூறும் கருத்து உங்கள் உறவை பெரிய அளவில் பாதிக்கும். இதனால் தான் பிரபலங்கள் தங்கள் உறவை ரகசியமாக வைத்துள்ளனர் என்று நிபுணர் கூறியுள்ளனர்.