நாம் அனைவரும் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்கிறோம். ஆனாலும், சில விஷயங்களில் நமது மக்கள் மத்தியில் தவறான அபிப்பிராயம் உள்ளது. அதாவது, ஒரு பெண்ணும் ஆணும் திருமணம் ஆகாமல் ஒரே வீட்டில் இருப்பது, காதலர்கள் பொதுவான இடத்தில் இருப்பது, ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் என பல விஷயங்களை இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளாத போக்கு இந்தியாவில் உள்ளது. இந்நிலையில் இதை எதிர்கொள்ள சட்டமே அனுமதிக்கிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. எனவே உறவு மற்றும் பாலுறவு பற்றி இந்திய சட்டங்கள் கூறுவது என்ன என்பதை தெரிந்துகொள்வது நல்லது.
இந்தியாவில் ஒரே பாலின திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இந்தியாவில் ஓரினச்சேர்க்கையை சட்டப்பிரிவு 377 குற்றமாக கருதப்படுகிறது. இருப்பினும், ஒரே பாலினத் தம்பதிகள் லிவ்-இன் ஜோடியாக இணைந்து ஒன்றாக வாழலாம். ஏனென்றால், 18 வயதை பூர்த்தி அடைந்தவர்களுக்கிடையிலான பாலுறவு குற்றமற்றது. இதில் ஓரினச்சேர்க்கையும் அடங்கும்.
லிவ்-இன் உறவு குற்றமற்றது : திருமணம் ஆகாத இரண்டு நபர்கள் லிவ்-இன் உறவில் இருப்பது இந்தியாவில் சட்டவிரோதமானது அல்ல. தற்போதையை, இளைஞர்கள் மத்தியில் திருமணம் மீதான வெறுப்பு அதிகரித்துள்ள அதே வேளையில், லிவ்-இன் உறவையும் அதிகம் விரும்புகிறார்கள். ஏனென்றால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் எந்த வித பிரச்னையும் செய்யாமல் பிரிந்து சென்றுவிடலாம். இளைஞர் இந்த முறையை விரும்பினாலும், பெரும்பாலானபெற்றோர்கள் இதை வெறுக்கிறார்கள்.
நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், ஹோட்டலில் உங்கள் கூட்டாளருடன் செக்-இன் செய்ய எந்த தடையும் இல்லை. இந்தியாவில் உள்ள எந்த ஹோட்டலில் வேண்டுமானாலும், 18 வயதை பூர்த்தியடைந்தவர்கள் அடையாளச் சான்றுகளுடன் விடுதியில் ஒன்றாக தங்க அனுமதிக்கப்படுவார்கள். இருப்பினும், திருமணமாகாத தம்பதிகள் ஹோட்டலில் செக்-இன் செய்ய அனுமதிக்காத ஹோட்டல்கள் உள்ளன.
இந்தியாவில் மருத்துவரின் ஒப்புதலுடன் கருக்கலைப்பு செய்ய பெண்களுக்கு முழு உரிமை உண்டு. திருமணமான அல்லது திருமணமாகாத பெண்கள் 20 வார கர்ப்பகாலம் வரை தேவையற்ற கர்ப்பத்தை கலைக்க அனுமதி உண்டு. மைனர் அல்லது பலாத்காரம் மற்றும் பாலுறவில் இருந்து தப்பிய பெண்களுக்கு 24 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு கால அவகாசம் வழங்கப்படும். ஆனால், இதற்கு மருத்துவரின் ஒப்புதல் முக்கியமாக கருதப்படுகிறது.
உங்கள் காதலருடன் பொது இடங்களில் ஹேங்கவுட் செய்யலாம். அதாவது, காதலர்கள் பொது இடங்களில் உட்காந்து பேசுவது மற்றும் ஹேங்கவுட் செய்ய எந்த தடையும் இல்லை. ‘ஆபாச செயல்களில்’ ஈடுபடாத வரையில் உங்களுக்கு நல்லது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 294-வது பிரிவின்படி, "மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்" ஆபாசமான செயல்களில் ஈடுபட்டால், 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
திருமணமானவர்கள் உடலுறவில் ஈடுபடுவது குற்றமாக கருதப்படாது. திருமண பலாத்காரத்தை (Marital rape) இன்னும் குற்றமாக அறிவிக்காத 34 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 15 வயதுக்குட்பட்ட மைனர்களுடன் உடலுறவு மேற்கொள்ளப்படாவிட்டால், உடலுறவு சம்மதமாக இல்லாவிட்டாலும் அது குற்றமாகாது. தனது மனைவியின் சம்மதம் இல்லாமல், அவருடன் உடலுறவில் ஈடுபடலாம்.
பாலியல் வேலை இந்தியாவில் சட்டவிரோதமானது அல்ல. இதில், விபச்சார விடுதி நடத்துவதும் அடங்கும். வர்த்தக பாலியல் தொழில்துறையின் முன்னணி மையங்களில் இந்தியாவும் ஒன்றாகும். இருப்பினும், குழந்தை விபச்சாரம், ஆள் கடத்தல், விபச்சார விடுதி நடத்துதல், ஹோட்டலில் விபச்சாரத்தில் ஈடுபடுதல் மற்றும் பிம்பிங் போன்ற தொடர்புடைய நடவடிக்கைகள் சட்டவிரோதமானது. பாலியல் தொழிலாளிகளை அடிப்படை மனித கண்ணியத்துடன் நடத்துவதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
திருமணமாகாத தம்பதிகள் சேர்ந்து வீடு வாங்கலாம். வயது வந்த இருவர் கூட்டுச் சொத்து வைத்திருப்பதையோ அல்லது ஒன்றாக வாடகைக்கு விடுவதையோ தடை செய்யும் சட்டம் இல்லை. ஆனால், வீட்டுக் கடன்களைப் பெற முடியாது. வாடகைக்கு எடுக்கும் போது, ஒப்பந்தத்தில் இரு கூட்டாளிகளின் பெயர்கள் இருக்க வேண்டும் என்பதை தம்பதிகள் மனதில் கொள்ள வேண்டும்.