முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

பலரும் தங்களுக்கு உடல் அல்லது மன ரீதியாக ஏற்படும் சில பாதிப்புகளால் லோ செக்ஸ் டிரைவால் பாதிக்கப்படுகிறார்கள்

  • 17

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    பொதுவாக வைட்டமின் டி-ஆனது சூரிய ஒளி வைட்டமின் (Sunshine vitamin) என்று அழைக்கப்படுகிறது, இது நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியும். இருப்பினும் வைட்டமின் டி செக்ஸ் வைட்டமின் என்றும் குறிப்பிடப்படுகிறது, இது பலருக்கும் தெரியாது.

    MORE
    GALLERIES

  • 27

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    பலரும் தங்களுக்கு உடல் அல்லது மன ரீதியாக ஏற்படும் சில பாதிப்புகளால் லோ செக்ஸ் டிரைவால் பாதிக்கப்படுகிறார்கள். Low sex drive-க்கு ஒரு குறிப்பிடதக்க காரணி வைட்டமின் டி குறைபாடு என்பது நிறைய பேருக்கு தெரியாது. லோ செக்ஸ் டிரைவ் என்பது பாலியல் ஆசை குறைவதை குறிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 37

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    செக்ஸ் லைஃபிற்கு வைட்டமின் டி எப்படி உதவுகிறது? டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியில் சூரியன் ஒரு பெரிய காரணியாக இருப்பதை பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதன் காரணமாக சூரிய ஒளி மூலம் கிடைக்கும் வைட்டமின் டி-யில் ஒருவருக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அது குறிப்பிட்ட ஆண்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கும். இருப்பினும், வைட்டமின் டி குறைபாடு என்பது ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் தான் பாதிக்கிறது. பெண்களுக்கு குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவை ஏற்படுத்தும் இந்த வைட்டமின் குறைபாடு, அவர்களுக்கும் லோ செக்ஸ் டிரைவ் ஏற்பட வழிவகுக்கும். சில ஆய்வுகளின்படி, பிறப்புறுப்புகளுக்கான ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வைட்டமின் டி உதவுகிறது. ரத்த நாளங்களின் சுவர்கள் மேம்படுத்துவதன் மூலம் இந்த நன்மை கிடைக்கிறது.

    MORE
    GALLERIES

  • 47

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    பெண்களின் செக்ஸ் வாழ்க்கையில்... மேலே ஏற்கனவே குறிப்பிட்டபடி, வைட்டமின் டி குறைபாடாடு அல்லது வேறு ஏதேனும் காரணிகளால் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவது அவர்களின் பாலியல் ஆசையில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். பாலியல் ஆசையை மேம்படுத்துவது தவிர ஈஸ்ட்ரோஜன்-ஆனது உடலுறவின் Discharge-ஐ உருவாக்குவதோடு யோனி சுவரில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைக்கவும் உதவுகிறது. ஒருவேளை போதுமான ஈஸ்ட்ரோஜன் இல்லாமல் போனால் உடலுறவை சுமுகமாக்க உதவும் பெண்ணுறுப்பு திரவம் போதுமான அளவு சுரக்காமல் யோனி இயல்பை விட வறண்டு உடலுறவை கடினமாக்குகிறது.

    MORE
    GALLERIES

  • 57

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    ஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில்... வைட்டமின் டி குறைபாடு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைந்தால் உடலில் முடி குறைதல், Muscle mass குறைதல் மற்றும் ஆண்களின் மார்பு பெரிதாக இருக்கும் நிலையான Man boobs ஏற்படுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். கடந்த 2018-ல் நடைபெற்ற ஒரு ஆய்வு ஆண்களில் வைட்டமின் டி மற்றும் பாலியல் செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்ந்து. இந்த ஆய்வில் 114 ஆண்கள் பங்கேற்றனர். அதிக வைட்டமின் டி-யை கொண்டிருந்தவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் மற்றும் விறைப்புத்தன்மையை சிறப்பாக இருந்தது கண்டறியப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 67

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    ஆண்களுக்கான சன்-டைம் : லோ செக்ஸ் டிரைவால் பாதிக்கப்பட்ட ஆண்கள், தங்களின் செக்ஸ் டிரைவை அதிகரிக்க இரண்டு வார காலத்திற்கு 30 நிமிடங்கள் சூரிய ஒளியில் நேரத்தை செலவிட வேண்டும். இப்போது கோடை காலம் என்பதால் செக்ஸ் டிரைவை அதிகரிக்க நீங்கள் போதுமான நேரம் வெயிலில் நேரம் செலவிடுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 77

    விட்டமின் டி குறைபாடு பாலியல் வாழ்க்கையையும் பாதிக்குமா..? உஷாராக இருங்கள்..!

    மெலனின் மற்றும் செக்ஸ் ஹார்மோன்களுக்கு இடையேயான தொடர்பு : போதுமான சூரிய ஒளியை பெறுவது உங்கள் உடலில் மெலனோசைட் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனை (MSH) அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இது மெலனின் உற்பத்திக்கு உதவி நம் சருமத்தை சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. சில ஆய்வுகளின்படி, மெலனின் மற்றும் செக்ஸ் ஹார்மோன்கள் செயல்திறனில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகும்.

    MORE
    GALLERIES