எல்லா உறவுகளுமே மோசமானதல்ல. மோசமான ஆண்களுடன் சிக்கித் தவிக்கும் பெண்களிடையே, அன்பு, காதல், மற்றும் முக்கியத்துவமும் அளிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஆண்களுக்கு காதல், திருமணம் என்று எல்லாமே முக்கியம். ஒவ்வொரு பெண்ணுக்கும் தன்னுடைய கணவன் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள், ஆசைகள் இருக்கும். அதில், திருமண உறவில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதும் அடங்கும். பெண்களை மதிக்கும் ஆண்கள், உண்மையில் மிகவும் நல்லவராக இருக்கும் ஆண்கள், இதையெல்லாம் செய்ய மாட்டார்கள்.
உங்கள் தோற்றம் பற்றி கேலி செய்ய மாட்டார் : நீங்கள் எப்படி இருந்தாலும், தோற்றத்தை கேலி செய்யாமல் இருப்பது நல்ல பண்பு. உங்களுடைய தன்னம்பிக்கையை உடைக்கும் படி, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்று மோசமான கமெண்ட் அல்லது கேலி செய்ய மாட்டார்கள். நீங்கள் எப்படி இருந்தாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்வார்கள், உங்களையும் தன்னம்பிக்கையுடன் இருக்க ஊக்குவிப்பார்கள்.
உங்கள் பிரைவசியில் தலையிட மாட்டார் : கணவன் மனைவியாக இருந்தாலுமே இருவருக்கும் பிரைவசி வேண்டும். எனவே, உங்கள் கணவர் எப்பொழுதுமே உங்களுடைய எல்லைகளை தாண்டி வரமாட்டார். உங்களுடைய பிரைவசியில் தலையிடமாட்டார். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு தேவையான நேரம் மற்றும் இடைவெளியை கொடுப்பார். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று மைக்ரோ மேனேஜ்மென்ட் செய்ய மாட்டார். அது மட்டுமல்லாமல் உங்கள் போனை பார்க்க வேண்டுமென்றோ அல்லது நீங்கள் பேசுவதை ஒட்டுக் கேட்பது என்ற எந்த வேலையும் செய்ய மாட்டார். உங்களுக்கான இடைவெளி வேண்டும் இல்லையென்றால், உறவு பிரிந்து விடுமோ என்ற பயத்தினால் இதை செய்யமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உங்களை எப்போதுமே மட்டம் தட்ட மாட்டார் : நீங்கள் உண்மையாகவே ஏதாவது செய்ய வேண்டும் அல்லது உங்களுக்கு ஏதாவது தேவை என்றால், உங்கள் ஆர்வத்தை கெடுத்து மட்டம் தட்ட மாட்டார். உங்கள் முடிவை ஆதரிக்கவில்லை என்றால் கூட, அதற்கு மரியாதை அளிப்பார். எப்போதுமே, ஊக்கமும், ஆதரவும் மட்டுமே அவரிடம் இருந்து பெறுவீர்கள்.
உங்களை மதிப்பை நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று எப்போதும் நினைக்க மாட்டார் : ஒரு நல்ல ஆணுக்கு தன்னுடைய மனைவியின் மதிப்பு, அவர் எவ்வளவு முக்கியம் என்று கட்டாயம் தெரிந்திருக்கும். எனவே, நீங்கள் உங்களைப் பற்றி அவருக்கு நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்படாது. ஒரு வேளை, உங்களுக்கு அப்படி தோன்றினால் அல்லது ஏதேனும் நடந்தால், அடுத்த நொடி நீங்கள் விலகி செல்லலாம்.
உங்களிடம் முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசாமால் இருக்க மாட்டார் : தேவையில்லாத விஷயங்களை பேசாமல் இருப்பது போலவே, உங்கள் உறவில் முக்கியமான விஷயங்களைப் பற்றி கட்டாயம் உங்களிடம் பகிர்ந்து கொள்வார், வெளிப்படையாக உரையாடுவார். எப்போதுமே, அவசியமான உரையாடல்களை மேற்கொள்வார். ஏனென்றால், உங்கள் இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பது எவ்வளவு முக்கியம், பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு அறிந்துள்ளார்.