புதிய வேலை, படிப்புக்காக, அல்லது பதவி உயர்வு என்று பலவித காரணங்களுக்காக விரும்புவோரை, வாழ்க்கை துணையை பிரிய வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்படும். காதலர்கள் அல்லது திருமணமானவர்கள் ஒன்றாக இருக்கும் போது பிரச்சனைகள் ஏற்படும். இவர்கள் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகள் ஒன்று, இவரும் வேறு வேறு ஊரில் தொலைதூரத்தில் இருப்பது தான். அடிக்கடி சந்திக்க முடியாது, ஒன்றாக நேரம் செலவிட முடியாது, பிரிந்தே இருக்க வேண்டும் என்பது மிகவும் கடினமாக உணரச் செய்யும். தொலை தூர உறவில் பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் என்ன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
தொலைதூர உறவில் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகள் :
பேசுவதற்கு புதிதாக ஒன்றுமே இல்லை: தொலை தூர உறவில் இருப்பவர்களுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் பேசுவதற்கு புதிதாக எதுவுமே இருக்காது. ஏற்கனவே இருவருக்கும் இடையில் இருக்கும் பிரிவு ஒரு விதமான கடுமையான மன நிலையை ஏற்படுத்தியிருக்கும். இந்நிலையில், தினமும் இருவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை ஆரம்பகாலத்தில் பகிர்ந்து கொள்வது மிகவும் சுவாரஸ்யமாக இருந்திறிக்கும். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதே விஷயத்தை பேசுவது என்பது உறவையே சலிப்பானதாக காண்பிக்கும். எனவே புதிதாக பேசுவதற்கு எதுவுமே இல்லை, சுவாரஸ்யம் இல்லை என்பது உறவையே கேள்விக்குறியதாக மாற்றும்.
இதற்கான தீர்வு : சாதாரணமாக நீங்கள் பேசுவதைப் பற்றி, அல்லது அன்றாட நிகழ்வுகளை பற்றி பகிர்ந்து கொள்வதை குறைக்கலாம் அல்லது முழுவதுமாகவே தவிர்க்கலாம். நீங்கள் பிரிந்திருந்தாலும், நீங்கள் இருவரும் இணைந்திருப்பது போல ஒரே நேரத்தில் திரைப்படங்களை பார்க்கலாம், ஆன்லைன் கேம் விளையாடலாம், அல்லது வீடியோ கால் மூலமாக ஒரே உணவை சமைக்கலாம், ஷாப்பிங் செய்யலாம். இவ்வாறு இருவரும் ஒரே வேலையை ஒரே நேரத்தில் செய்வது உறவை சுவாரஸ்யமானதாகவும் உங்களை நெருக்கமாகவும் உணரச் செய்யும்.
உறவில் விரிசலும் பிரிவும் அதிகரிக்கிறது : சாதாரணமாகவே நீண்ட காலமாக காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இல்ல திருமண வாழ்விலும் கூட ஒரு கட்டத்தில் விரிசல், லேசான பிரிவு ஆகியவை ஏற்படும். தொலைதூர உறவில் இது இயல்பானதுதான். நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசித்தாலும், தொலைதூர உறவில் புதிய நபர்கள் அறிமுகம், புதிய சூழல், புதிய நண்பர்கள் என்று எல்லாமே புதிதாக மாறும் பொழுது தனிப்பட்ட விருப்பங்களும் மாறும். எனவே உறவில் விரிசலும் பிரிவும் அதிகரிப்பது அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை.
உறவில் பாதுகாப்பின்மை : எல்லா உறவுகளிலுமே ஏதோ ஒரு கட்டத்தில் பாதுகாப்பு இன்மையை உணர்வோம். இது தொலைதூர உறவுகளில் அதிகமாக காணப்படும். பக்கத்தில் இருந்தாலே ஏதேனும் ஒரு பிரச்சனை இருந்தால், அதை மனம் விட்டு பேச முடியாமல் பாதுகாப்பின்மை உடல் மற்றும் மனதை தீவிரமாக பாதிக்கும். எனவே தொலைதூர உறவுகளில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் இதைத் தவிர்க்க முடியாது.
இதற்கான தீர்வு : தொலை தூர உறவில் இருப்பவர்களுக்கு மிகவும் முக்கியமானது கம்யூனிக்கேஷன்! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று முகத்தை பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், மன ஓட்டம் ஆகியவற்றை பற்றி நீங்கள் வெளிப்படையாக கூற வேண்டும். உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதை மனம் விட்டு பேசுங்கள். ஒருவேளை நீங்கள் இந்த உறவில் பாதுகாப்பு இல்லாதது போல உணர்கிறீர்கள் அல்லது உங்கள் பார்ட்னர் பிரிந்து செல்வது போல தோன்றுகின்றது என்றால் அதைப் பற்றி நீங்கள் வெளிப்படையாக தெரிவிப்பது மிக மிக அவசியம்.