முகப்பு » புகைப்பட செய்தி » ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

சட்டென்று ஒரு ஆணைப் பார்த்து “நீங்கள் வலிமையானவரா” என்று கேட்டுவிட முடியுமா? அப்படியே கேட்டுவிட்டாலும் ஆம் என்பதுதானே அவர்களின் பதிலாக இருக்கும். இதனால் தான், ஆண்களின் வலிமையை ரகசியமாக கண்டுபிடிக்க பெண்கள் விரும்புகின்றனர்.

 • 17

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  தன் அன்புக்கு கட்டுப்பட்ட ஆண் ஒருவர் தனக்கு கணவராக வர வேண்டும் என்பதுதான் அனைத்து பெண்களின் விருப்பமாக இருக்கிறது. அதே சமயம், தன்னை தவிர்த்து பிறரிடத்தில் தன் கணவர் வலிமையானவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர். அதிலும், திருமணத்திற்கு முன்பாக ஒரு ஆணை காதலிக்க நினைக்கும்போதே, இதை தெரிந்து கொண்டு அதன் பின்னர் தான் கரம் பிடிக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 27

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  எல்லாம் சரிதான். சட்டென்று ஒரு ஆணைப் பார்த்து “நீங்கள் வலிமையானவரா” என்று கேட்டுவிட முடியுமா? அப்படியே கேட்டுவிட்டாலும் ஆம் என்பதுதானே அவர்களின் பதிலாக இருக்கும். இதனால் தான், ஆண்களின் வலிமையை ரகசியமாக கண்டுபிடிக்க பெண்கள் விரும்புகின்றனர். அதற்காக சில பரிசோதனைகளையும் முன்வைக்கின்றனர். அவை குறித்து இப்போது பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  உடல் வலிமைக்கு சவால் : உடல் அளவில் ஆண் எவ்வளவு வலிமையானவர் என்று தெரிந்து கொள்வது பெண்களின் விருப்பமாக இருக்கும். ஆனால், அதை சட்டென்று காட்டிக் கொள்ள மாட்டார்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் வரையில் காத்திருந்து திடீரென்று கடினமான பணியை ஒப்படைப்பார்கள். அதன்மூலம் உங்களது உடல் வலிமையை கவனிப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 47

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  மன உறுதிக்கு பரிசோதனை : உடல் வலிமையையே பரிசோதிக்கும்போது மன வலிமையை பரிசோதிக்காமல் விட்டுவிடுவார்களா என்ன? உணர்ச்சிவசப்படக் கூடிய விஷயங்கள், சோகக் கதைகள் பலவற்றை உங்களிடம் பெண்கள் பகிர்ந்து கொள்வார்கள். அப்போது நீங்கள் காட்டும் முக பாவனைகள் மற்றும் பயன்படுத்தும் வார்த்தைகளைக் கொண்டு உங்கள் மன வலிமையை பரிசோதனை செய்வார்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  நம்பிக்கையானவரா என்பதற்கான பரிசோதனை: சமூக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் சவால்களை நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் எதிர்கொள்கிறீர்கள் என்ற பரிசோதனையை பெண்கள் மேற்கொள்வார்கள். குறிப்பாக பொதுப் பிரச்சினைகளில் நீங்கள் எடுக்கும் முடிவு என்ன, சமூகத்தில் உங்கள் உரையாடல் எப்படி இருக்கிறது என்பதை ரகசியமாகக் கண்காணித்துக் கொண்டிருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 67

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  பொருளாதார பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை : எந்தவொரு பெண்ணும் இதை ஆய்வு செய்யாமல் இருந்தால்தானே ஆச்சரியம். ஆனால், வாழ்க்கை பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தான் ஆண்களின் பொருளாதாரம் வலிமையாக இருக்க வேண்டும் என்று பெண்கள் நினைக்கிறார்களாம். நீங்கள் எவ்வளவு செலவு செய்கிறீர்கள், சேமிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பதை ஆழ்ந்து கவனிப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 77

  ஆண்களே... உங்க வலிமையை தெரிஞ்சுக்க பெண்கள் இப்படியெல்லாம் டெஸ்ட் வைப்பாங்களாம்..!

  மற்றவர்களை சார்ந்திருக்காமல் சுயசார்பு வாழ்வியல் : ஒரு ஆண் மற்றவர்களை சார்ந்திருக்காமல் தற்சார்பு உடையவராக இருக்க வேண்டும் என்று பெண்கள் கருதுகின்றனர். சுயமாக முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலைக்கு ஆண்களை கொண்டு செல்வதுடன், ஆண்களின் திறனை வெளிக்கொணரும் பரிசோதனைகளையும் பெண்கள் மேற்கொள்கின்றனர். சின்ன, சின்ன விஷயங்களுக்கு கூட பிறரை நம்பியிருக்கும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம்.

  MORE
  GALLERIES