வாட்டி எடுத்த வெயில் காலத்திற்குப் பின் கிடைக்கும் அலாதியான இன்பம் என்றால் அது குளிர்காலம் தான். கதகதப்பான போர்வைகள், இதமான ஸ்வெட்டர்ஸ் மற்றும் சூடான சாக்லேட் ஆகியவற்றுடன் குளிர்காலம் ஒரு சரியான காதல் பருவத்தைப் போல் தெரியும். நெருப்பை மூட்டி குளிர் காய்வதில் கிடைக்கும் சுகமே தனிதான். குளிர் காலத்தில் இவை மட்டும் இன்பம் அல்ல. இவற்றுக்கு நடுவே கணவன் - மனைவியின் இடைவெளியில்லாத நெருக்கம் கூட இன்பம் தான்.
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் ஒரே போர்வையில் ஒன்றாக நீண்ட நேரம் இருப்பதற்கு இந்த குளிர்காலம் உங்களைத் தூண்டும். குளிர்ந்த வானிலை உங்கள் மனநிலையை உடலுறவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும். இறுதியில், செக்ஸ் மூடு உங்களை சூடேற்றும் இதனால் நீங்கள் இருவரும் குளிர்ச்சியை முழுவதுமாக மறப்பீர்கள். மேலும், குளிர்காலத்தில் உடலுறவு செய்வது உங்களின் மனநிலையையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
காதலும், சௌகரிய உணர்வும் : இதமான குளிர் காலத்தில் ரொமான்ஸ் செய்தால் அட்டகாசமாக இருக்கும். அதனால்தான் ஹனிமூன் செல்லும் ஜோடிகள் ஊட்டி, குன்னூர், கேரளா, கொடைக்கானல் என மலைப்பிரதேசங்களை தேர்வு செய்வார்கள். அதோடு குளிர்காலத்தில் இரவு சீக்கிரம் நெருங்கிவிடும் என்பதால் வெளியே செல்லும் கணவன்-மனைவி வீட்டிற்கு சீக்கிரம் வரக்கூடும். அப்போது நீண்ட நேரம் பேசிக்கொள்ளவும், ரொமான்ஸ் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் இந்த குளிர்காலத்தில் பெண்கள் உடலுறவு கொள்வதற்கு சௌகரியமாக உணர்வதாக 2000ம் ஆண்டில் வெளியான ஆய்வுகள் கூறுகின்றன. சில பெண்கள் மாதவிடாய் சிரமத்தை குறைக்கவும் மற்ற மனஅழுத்தத்தையும் குறைக்க உடலுறவு கொள்வதாகவும் கூறியுள்ளனர்.
குளிர்காலத்தில் உடலுறவு எவ்வாறு முக்கியமானது : ஆண்டின் இந்த நேரம் கடுமையான குளிர் காரணமாக உங்கள் பார்ட்னருடன் உங்கள் மனநிலையை பகிர அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால், குளிர்காலத்தின் குளிர்ந்த, இருண்ட நாட்கள் உடலுறவை மேலும் வலுப்படுத்தும் மனநிலையை ஏற்படுத்துகின்றன. இது உடனடியாக உங்கள் மனநிலையை அதிகரிக்கும், அந்த நேரம் உங்களுக்கு கோடைகால அதிர்வுகளை மனது தருகிறது. சோம்பலான, குளிர்காலத்தில் நீங்கள் உற்சாகமடைவதை உணரலாம், எனவே குளிர்கால உடலுறவைத் தேர்வுசெய்ய இது ஒரு காரணம். செக்ஸ், பாசிட்டிவ் எண்டோர்பின்கள் மற்றும் ஆக்ஸிடாஸின்களை வெளியிடுகிறது, இது தம்பதிகளை நெருக்கமாக வைத்திருக்கும். இரு உடல்கள் உராய்வதால், உடலுறவு ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது என்று ஆராய்ச்சி கூறுகிறது.
இது உங்கள் நேர்மறையான சிந்தனையின் அளவை அதிகரிக்கிறது, மனச்சோர்வு அல்லது பதட்டத்தின் அறிகுறிகளைக் குறைக்கிறது. இந்த ஹார்மோன்கள் உங்கள் பார்ட்னருடனான உங்கள் உறவில் பாலியல் உல்லாசத்தை உருவாக்க உதவுகின்றன. குளிர்காலத்தில் உடலுறவு கொள்வது குளிர்காலத்தில் நீங்கள் கொண்டிருக்கும் கூடுதல் கலோரிகளை எரிக்க ஒரு சிறந்த நேரம். கலோரிகளை எரிக்க செக்ஸ் உங்களுக்கு உதவும். மேலும், இது உங்களுக்கும் உங்கள் வாழ்க்கைத்துணைக்குமான பாலியல் ஈர்ப்பை அதிகரிக்கிறது.
குளிர்கால உடலுறவுக்கு செய்ய வேண்டியவை : குளிர்காலத்தில் உடலுறவு கொள்ள சில டிப்ஸ்களைப் பின்பற்றுவது செயல்பாட்டில் மட்டுமே உங்களுக்கு உதவும். உடலுறவில் ஈடுபடும்போது நீங்கள் சாக்ஸ் அணிந்து கொள்ளலாம். உங்கள் கால்விரல்கள் குளிர்ச்சியாக இருந்தால் குறைவான புணர்ச்சிக்கான வாய்ப்புகள் ஏற்படலாம், சாக்ஸ் அணிந்து கொண்டால் உங்கள் கால்விரல்களை வெப்பமாகும். மேலும் உடலுறவின்போது போர்வைகளை கொண்டு போர்த்துவது உங்களை மிகவும் சூடாக வைத்திருக்கும். மேலும், அதிக அரவணைப்புடன் மிகவும் நெருக்கமாக இருப்பது போன்ற பாலியல் நிலைகளுக்கு நீங்கள் செல்லலாம். அப்போது உங்கள் உடல் வெப்பம் மாறும், இது உங்களுக்கு ஒரு கோடைகால உணர்வைத் தரும்.
மனிதர்களின் அனைத்து செயல்களையும் செய்வதற்கென சரியான நேரம் என்ற ஒன்று உள்ளது. மற்ற நேரங்களைக் காட்டிலும் அந்த குறிப்பிட்ட நேரத்தில் அந்த செயலை செய்யும்போது அது கூடுதல் சிறப்பாகவும், திருப்திகரமாகவும் அமையும். இந்த விதி உடலுறவிற்கும் பொருந்தும் அந்த வகையில் மேற்சொன்ன டிப்ஸ்கள் உங்களுக்கு நிச்சயம் உதவும்.