தாம்பத்திய உறவு என்பது மனிதனின் இயல்பான மற்றும் இயற்கையான ஒன்று. அது மனித ஆரோக்கியத்திற்கும் முக்கியமான விஷயம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க இதுவும் ஒரு காரணம்.
2/ 12
ஆனால் சிலருக்கு இது கட்டுப்பாடின்றி இருக்கலாம். உடலுறவு என்பது மற்ற மனித பழக்கங்களைப்போல் அதுவும் ஒரு அங்கம். ஆனால் அதை பிரதானமாக நினைக்கும் சிலரும் உள்ளனர். இப்படி கணவன் மனைவி இருவருக்குள் ஒருவர் இவ்வாறு இருந்தாலும் அது அந்த உறவுக்கு பாதிப்பை உண்டாக்கலாம்.
3/ 12
உங்களுக்கும் அப்படியான சந்தேகம் இருந்தால், எந்த தூரம் வரை சென்றால் அவர் உடலுறவுக்கு அடிமையானவர் என்பதை தெரிந்துகொள்ள இங்கு பார்க்கலாம்.
4/ 12
தினமும் உடலுறவு கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும். உடலுறவு கொள்ளாமல் தூக்கமே வராது என நினைப்பார்கள். இதனால் துணையை காயப்படுத்தவும் செய்யலாம்.
5/ 12
மற்ற எந்த விஷயங்கள் மீதும் நாட்டம் இருக்காது. எந்த விஷயத்தை பார்த்தாலும் செக்ஸ் மூட் தானாக ஒட்டிக்கொள்ளும்.
6/ 12
செல்ஃபோன், லாப்டாப், கணினி என அனைத்திலும் ஆபாச வீடியோக்களை அடிக்கடி அல்லது தினமும் பார்ப்பது அவர்களுடைய வழக்கமாக இருக்கும்.
7/ 12
திருப்தியான உடலுறவை அனுபவிக்கும் வரை துணையை விடாமல் கட்டாயப்படுத்துதல். அவருக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் கட்டாயப்படுத்துதல்.
8/ 12
உங்களுக்கு முதல் முக்கியதுவமே செக்ஸாகத்தான் இருக்கும். மற்றதெல்லாம் அடுத்தபட்சம்தான்.
9/ 12
எதிலும் 10 நிமிடத்திற்கு மேல் கவனம் செலுத்த முடியாது. ஏனெனில் அடிக்கடி உங்கள் கனவு உலகத்தில் கற்பனையில் மிதந்து கொண்டுருப்பீர்கள்.
10/ 12
துணையிடம் எப்போதும் உடல் சார்ந்த உறவை மட்டுமே எதிர்பார்ப்பீர்கள். அதைத்தாண்டி அவருக்காக எந்த விஷயத்தையும் செய்ய மாட்டீர்கள். அவ்வாறு செய்தாலும் அது செக்ஸ் தேவைக்காக மட்டுமே இருக்கும்.
11/ 12
துணையை தாண்டி வெளியே தகாத உறவுகளை வைத்துக்கொள்ளவும் தயங்க மாட்டார்கள்.
12/ 12
இவ்வாறு மேலே குறிப்பிட்ட விஷயங்கள் இருப்பின் அதிலிருந்து நீங்கள் வெளியேற நினைக்கிறீர்கள் எனில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
112
நீங்கள் உடலுறவு கொள்வதில் அடிமையானவரா..?