இன்றைய வாழ்க்கை சூழலில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு சரியான நேரம் ஒதுக்குவதே கிடையாது. இதன் விளைவாக ஏராளமான பொய்களை தொடக்கம் முதலே கூற செய்கிறோம். குறிப்பாக காதல் உறவில் இது போன்ற சிக்கல்கள் அதிகம் உண்டு. சிறிய பொய்களோ, பெரிய பொய்களோ -இவை ஒருவரின் வாழ்க்கையையே புரட்டி போட கூடிய அளவிற்கு பலம் வாய்ந்தவை. இது போன்ற சில காரணிகளால் காதல் உறவில் நம்பிக்கை இல்லாமல் போய் விடுகிறது. எனவே ஒரு உண்மையான துணையாக இருப்பதற்கு சில வழிமுறைகள் உண்டு. அவற்றை விரிவாக இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முக்கியத்துவம்: காதல் உறவில் உள்ளவர்களுக்கு தன் துணையுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என்கிற எண்ணம் இருக்கும். ஆனால், வேலை பளு காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ அதை செய்யாமல் இருப்பர். ஆனால், இது சரியானதல்ல. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை கொண்டு செல்ல முதலில் அவருடன் நேரம் செலவிடுங்கள். அவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
உழைப்பு: உண்மையான துணை என்பவர் பல வகைகளில் அந்த உறவை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதிகம் உழைப்பு செலுத்துவார்கள். அதாவது தனது துணையை பற்றி புரிந்து கொள்ளுதல், அவருடன் பேசுதல், வெளியில் அழைத்து செல்லுதல் ஆகியவற்றை செய்வார்கள். இது அவரை உண்மையனவராகவும், நம்பிக்கைக்குரிய ஒருவராகவும் மாற்றும்.
சண்டைகள்: காதல் உறவு என்றாலே சண்டைகளும் வர கூடும். ஆனால், அந்த சண்டைகள் பெரிய அளவில் சென்று இருவருக்கும் மோசமான பாதிப்பை தர கூடியதாக இருக்க கூடாது. உண்மையான நேசம் கொண்டவர்கள் காதல் உறவில் சண்டைகள் வந்தாலும் அதை நல்ல முறையில் கையாண்டு, சரிசெய்ய பார்ப்பார்கள். அதே போன்று எக்காரணம் கொண்டும் தன துணையை காயப்படுத்த விரும்ப மாட்டார்கள்.