உங்கள் துணை எந்தக் காரணமும் இல்லாமல் உங்களிடன் பொய் சொன்னால், அது அந்த உறவில் சிக்கலை உண்டாக்கும். ஆனால், இது ஒரு வகையான மனநோயாக கூட இருக்கலாம். இதை மைதோமேனியா மற்றும் சூடோலாஜியா ஃபேன்டாஸ்டிகா என்று அழைக்கின்றார்கள்.இது போன்று பெரும்பாலான நேரத்தில் பொய் கூறுபவர்கள், பொய் சொல்ல கூடிய கட்டாயப் பழக்கத்தை கொடுள்ளனர். சிலர் ஏன் கட்டாயமாக பொய் சொல்கிறார்கள் என்பதற்கு தனித்தனியாக வரையறுக்கப்பட்ட காரணம் இல்லை என்றாலும், இது ஆளுமைக் கோளாறுகளால் இப்படி ஏற்படலாம். இது போன்று உள்ளவர்களை சமாளிப்பதற்கான 5 வழிகளை இனி தெரிந்து கொள்வோம்.
நன்றாக யோசியுங்கள் : பொய் சொல்வதையே வழக்கமாக கொண்டுள்ளவர்களை சமாளிக்க நீங்கள் செய்ய வேண்டியது, முதலில் பேச வேண்டும். ஏனெனில் இந்த உறவைத் தொடர விரும்புகிறீர்களா என்பதை முதலில் தீர்மானிக்கவும். இது போன்ற நபர்கள் பல வகையில் உங்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்த கூடும். எனவே, இப்படி ஒருவருடன் உங்கள் உறவை தொடர்வதில் உள்ள நன்மை தீமைகளை பகுத்தறிவுடன் ஆராயுங்கள்.
அமைதியாக இருங்கள் : எப்போதும் பொய்களை சொல்வதை வழக்கமாக உள்ளவர்களிடம் நீங்கள் உங்களின் பொறுமையை இழக்காமல் இருத்தல் வேண்டும். நீங்கள் அவர்களை எதிர் கொள்ளும்போது மறுப்பு இருக்கும், அது உங்களுக்கு வெறுப்பை உண்டாக்கும். ஆனால் இந்த வெறுப்பை தடுக்க அவரிடம் கனிவாக பேச தொடங்குங்கள். இது பல பிரச்சனைகளை தடுக்கும் ஆற்றல் கொண்டது.
பழி போடுதல் : தனிப்பட்ட முறையில் தப்பித்து கொள்வதற்கு பொய் சொல்லப்படுவதைத் தவிர வேறு சிறந்த வழி இல்லை. உங்கள் துணை உங்களிடம் என்ன சொன்னாலும் பொய்க்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் உளவியல் நிலைமைகள் மோசமாக இருப்பதால் இது போன்று நடந்து கொள்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு வழி நடத்துங்கள்.
குற்றச்சாட்டு : உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மோசமாக உள்ளது என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது உங்கள் மனதை சாந்தப்படுத்தும். அதே போன்று அவர்கள் செய்யும் தவறுகளையும் சுட்டி காட்ட மறக்காதீர்கள். உங்கள் துணை பொய் சொல்லும்போது நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள் என்பதை நிதானமாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்போது தான், அந்த மனநிலையில் இருந்து அவர்கள் வெளிவர தொடங்குவார்கள்.
ஊக்கம் : தங்கள் பொய்களுடன் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும் என்றாலும், நீங்கள் அது குறித்து தொடர்ச்சியாக கேட்டு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம். எனவே, இதற்கு மாறாக அவர்களின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. அவர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பதை நிறுத்தும் வரை உரையாடலைத் தொடர விரும்பவில்லை என்பதைப் பற்றி வெளிப்படையாக இருங்கள். இது அந்த நபரை மாற்றி கொள்ள உதவியாக இருக்கும்.