முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

எப்போதுமே கோபத்துடன் நடந்து கொள்வது அவர்களது குணாதிசயம் என்றால், ஒரு காலமும் அவர்களை நீங்கள் மாற்றிவிட முடியாது. இதைக் கேட்டவுடன் மனச்சோர்வு அடைய வேண்டாம்.

  • 16

    கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

    உங்கள் மனைவி கோபப்படுகிறாரா? திருமணம் செய்த 10 ஆண்களிடம் இந்தக் கேள்வியை கேட்டால் தோராயமாக 7 பேர் ஆமாம் என்ற பதிலை தான் சொல்வார்கள். ஓரிருவர் மட்டுமே விதிவிலக்காக இருக்க முடியும். மனைவி காரணமே இன்றி கோபம் கொள்வதாகவும், அவரை சமாளிக்க முடியவில்லை என்றும் சக நண்பர்களிடம் அனேக ஆண்கள் புலம்புவது உண்டு.

    MORE
    GALLERIES

  • 26

    கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

    பணியிடத்தில் புலி போல எல்லோரிடத்திலும் சீறுகின்ற ஆண்கள், வீட்டிற்கு சென்றதும் மனைவிக்கு பயந்து பூனை போல பதுங்கி விடுவார்கள். நீங்கள் தவறு செய்யும் பட்சத்தில் மனைவி உங்கள் மீது கோபம் கொள்வது நியாயமான விஷயம் தான். அதே சமயம், எப்போதுமே கோபத்துடன் நடந்து கொள்வது அவர்களது குணாதிசயம் என்றால், ஒரு காலமும் அவர்களை நீங்கள் மாற்றிவிட முடியாது. இதைக் கேட்டவுடன் மனச்சோர்வு அடைய வேண்டாம். சில எளிமையான ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றினால் கோபக்கார மனைவியை ஓரளவுக்கு சமாளிக்கலாம்.

    MORE
    GALLERIES

  • 36

    கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

    அவர் சமாதானம் அடையும் நிலையை கண்டுபிடியுங்கள் : என்னதான் கோபமாக சண்டையிடுபவர் என்றாலும், கல்லுக்குள் ஈரம் என்பதைப் போல உங்கள் மனைவி மனதின் ஒரு ஓரத்தில் உங்கள் மீதான அன்பு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆகவே, ஒவ்வொருமுறை கோபம் கொண்ட பிறகும், அந்தக் கோபம் தணிந்து உங்கள் மீது சமாதானம் அடைவார். அது என்னவென்று கண்டுபிடித்து அதற்கேற்ப நடந்து கொள்ளுங்கள். எந்தெந்த சூழ்நிலைகளில் அவர் கோபம் கொள்கிறார் என்பதையும் கண்டறிந்து, அதை தவிர்க்க பாருங்கள்.

    MORE
    GALLERIES

  • 46

    கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

    வாக்குவாதம் வேண்டாமே : கோபத்தின் உச்சியில் இருக்கும் உங்கள் மனைவி எதையும் காது கொடுத்து கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டார். அத்தகைய சூழலில் உங்கள் தரப்பு நியாயங்களை புரிய வைக்க முயற்சிக்க வேண்டாம். ஆகவே வாதம் செய்வதை தவிர்க்கவும். “கொஞ்சம் அமைதியாக இரு’’ என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிடாதீர்கள். அவர்களின் கோபத்தை இது இரட்டிப்பாக்கி விடும்.

    MORE
    GALLERIES

  • 56

    கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

    சரண்டர் ஆகலாம் : உங்கள் மீது தவறு இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, அதுகுறித்து வாதம் செய்து கொண்டிருக்காமல் நேராக சரண்டர் ஆகுவது பாதுகாப்பான வழிமுறை ஆகும். நீங்கள் எந்த தொனியில் பேசினால், உங்கள் மனைவி ஆறுதல் அடைவாரோ, அந்தத் தொனியில் பேசுங்கள்.

    MORE
    GALLERIES

  • 66

    கோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி..? ஆலோசனைகள் இதோ..!

    வார்த்தைகளை பெரிதுபடுத்த வேண்டாம் : கோபத்தில் இருக்கும் சமயத்தில் என்ன பேசுகிறோம் என புரியாமல், உங்கள் மனதை காயப்படுத்தும் வகையில் உங்கள் மனைவி பேச கூடும். தடித்த வார்த்தைகள் மனதை காயப்படுத்தும். ஆனால், அதை நினைத்துக் கொண்டு இருந்தால் பிரச்சினை தீராது. என்னதான் திட்டினாலும் உங்கள் மனைவியின் ஆழ்மனதில் உங்கள் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கும். ஆகவே, கோபத்தில் பேசிய வார்த்தைகளை பெரிதுபடுத்தி பார்க்க வேண்டாம்.

    MORE
    GALLERIES