சுயநலப் போக்குடன், எந்த சமயத்திலும் எரிந்து விழுந்து பேசும் வாழ்க்கைத் துணையை சமாளிப்பது சற்று சிக்கலுக்கு உரிய விஷயம் தான். உங்களுக்கு மூச்சுத்திணறலே கூட வந்துவிடும். குறிப்பாக, உங்கள் வாழ்க்கைத் துணையை சமாளித்து, இயல்பான நிலையில் உறவை தக்க வைத்துக் கொள்வதே உங்களுக்கு சவால் மிகுந்த காரியமாக இருக்கும்.இதுபோன்ற மக்கள் எப்போதுமே தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். வாழ்க்கை குறித்த எதிர்மறையான சிந்தனையை கொண்டிருப்பார்கள். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்ற ஆலோசனைகளை இந்தச் செய்தி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அவர்களது பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டாம்
பொதுவாக சுயநலப் போக்குடன் இருக்கும் மக்கள், அடுத்தவர்கள் தங்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆகவே, அவர்கள் எந்தப் பிரச்சினையில் இருந்தாலும் அது என்னவென்று கேட்பதோ, அதற்கு தீர்வு சொல்ல முயற்சிப்பதோ வேண்டாம். அவர்களது நடத்தையில் முரட்டுத்தனம் தென்பட ஆரம்பித்தால் நீங்கள் ஒதுங்கி விடுங்கள்.
எல்லைகளை வரையறை செய்யவும் : எந்த ஒரு உறவிலும் எல்லைகள் மிக முக்கியம். உங்கள் எல்லைகள் சிறப்பானதாக இருந்தால் உங்கள் தனித்தன்மையை பாதுகாக்க முடியும். மேலும் உறவும் சீரான நிலையில் இருக்கும். சுயநலப் போக்குடன் உள்ள வாழ்க்கை துணை உங்கள் எல்லைகளை அத்துமீற முயற்சி செய்வார். அவர்களிடம் சாதூர்யமாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் கோபம் கொண்டு நியாயம் கேட்க முயற்சி செய்தீர்கள் என்றால், அவர்கள் அதைவிட மிகுதியாக கோபம் கொள்வார்கள். இதனால் நீங்கள் எதிர்பார்க்கும் தீர்வு கிடைக்காது.
பிறருடைய உதவியை நாடுங்கள் : நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நம் வாழ்க்கை துணை தான் நமக்கு ஆறுதலாக இருக்க வேண்டும். அவர் நமக்கு உறுதுணையாக இருப்பது அவசியம். ஆனால், கோபமும், சுயநலமும் மிகுந்த வாழ்க்கை துணையிடம் இருந்து நீங்கள் அதை எதிர்பார்க்க இயலாது. ஏனென்றால், ஆறுதல் அளிக்க வேண்டிய நபரே பிரச்சினைக்கு உரிய நபராக இருந்தால் என்ன செய்வது?