முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

இந்த பொங்கலுக்காக உங்கள் இல்லத்திற்கு உறவினர்களை அழைப்பதாக இருந்தால், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் வைத்து நெருங்கிய நபர்களை மட்டுமே அழைக்க வேண்டும்.

 • 16

  Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

  பொங்கல் என்றாலே ஊர் கூடி பொங்கல் வைத்து வழிபடுவதுதான் சிறப்பு. தற்போதைய காலகட்டத்தில் அப்படி ஊர் கூடி கொண்டாடுவதில்லை என்றாலும் உறவினர்கள் ஒன்று கூடி பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் அச்சம் இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சாரிக்கைகளையும் கடைபிடிப்பது அவசியம். அப்படி என்னென்ன விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

  இந்த பொங்கலுக்காக உங்கள் இல்லத்திற்கு உறவினர்களை அழைப்பதாக இருந்தால், கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதை மனதில் வைத்து நெருங்கிய நபர்களை மட்டுமே அழைக்க வேண்டும். மேலும், உறவினர்கள் மற்றும் நீங்கள் உட்பட முகக்கவசம் அணிந்துகொள்வதை மறவாதீர்கள். அதோடு, போதுமான சமூக இடைவேளியை பராமரிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 36

  Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

  1. உணவு மற்றும் பானங்கள் : சுவையான உணவு மற்றும் பானங்கள் ஒவ்வொரு பண்டிகையின் போது முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், ஆரோக்கியமான உணவுகளை சமைத்து பரிமாறலாம். உங்கள் உணவு பட்டியலில் நோய் எதிர்ப்பு சக்திகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

  MORE
  GALLERIES

 • 46

  Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

  2. அலங்காரங்கள் : இந்த ஆண்டு குறைவான நபர்களே உங்கள் வீட்டிற்கு வருகை தர வாய்ப்புள்ளதால் நீங்கள் குறைவான இடத்திலேயே அழகாக அலங்கரிக்க முயற்சி செய்யுங்கள். வழக்கம் போல நாற்காலிகளை ஒரு மேசையை சுற்றி வைப்பது ஒரு சலிப்பான விருப்பமாகும். உங்கள் வரவேற்பு அறையை அல்லது வெளிப்புற இடத்தை ஒரு நல்ல வண்ணமயமான அமைப்பாக மாற்றுங்கள். பொங்கல் மண்பானை, கரும்பு, தோரனைகள், பூக்கள் என வீட்டில் டிரெடிஷ்னல் லுக்கில் அலங்கரியுங்கள். அதோடு ஒரு கம்பளம் மற்றும் சில அழகான மெத்தைகளை பயன்படுத்தி அமரும் இடத்தையும் அதனை சிறிய விளக்குகளாலும் அலங்கரியுங்கள்.

  MORE
  GALLERIES

 • 56

  Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

  3. தீம் : ஒரு சாதாரண அலங்காரங்கள் நன்றாகவே இருந்தாலும் கூட, தீம் அடிப்படையிலான ஒன்று இனிமையானது. உங்கள் விருந்துக்கு ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை தேர்ந்தெடுத்து, அதன்படி ஆடை அணியுமாறு உங்கள் உறவினர்களைக் கேட்கலாம். உங்கள் குடும்பத்தினர் மற்றும் உங்கள் வீட்டிற்கு வரும் உறவினர்களை ஒரே தீம் அதாவது ஒரே நிற உடைகள் போன்றவற்றை மேற்கொள்வது கூடுதல் அழகை தரும். இது பொங்கல் கொண்டத்தின் அழகை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

  MORE
  GALLERIES

 • 66

  Pongal 2022 : உறவினர்களுடன் வீட்டிலேயே பொங்கலை எப்படி பாதுகாப்பாக கொண்டாடுவது..?

  4. பொங்கல் பிளேலிஸ்ட் : தனித்துவமான இசை இல்லாமல் பண்டிகை கொண்டாட்டம் நிறைவடையாது. உங்கள் கொண்டத்தை தொடங்குவதற்கு முன்பு பொங்கல் பிளேலிஸ்ட்டை தயார் செய்துகொள்ளுங்கள். பொங்கலுக்கு கிராமத்து பாணியிலான பாடல்கள் நன்றாக இருக்கும். ஃபோக் சாங் லிஸ்ட் தயார் செய்துகொள்ளுங்கள். அதேபோல் பிளேலிஸ்ட்டில் உள்ள பாடல்கள் நடனங்களுக்கு ஏற்றவையாக இருக்கும் வகையில் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆடல், பாடலுடன் உங்கள் பொங்கலைக் கோலாகலமாக கொண்டாடுங்கள்.

  MORE
  GALLERIES