ஒரு ஆணுக்கு தனது வாழ்நாள் முழுவதுமே எப்போதும் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து இருந்து தான் பழக்கமாக இருந்திருக்கும். திடீரென்று அவனுடைய வாழ்வில் ஒரு பெண் நுழையும் போது, அப்பெண்ணிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை பற்றியோ அல்லது அவர்களிடம் எப்படி உறவை வளர்ப்பது என்பதை பற்றியோ பலருக்கும் சரியான புரிதல்கள் இல்லை. ஏனெனில் பலகாலமாக எதிர் பாலினத்தவரிடம் எவ்வாறு நடந்து கொள்வது என்பதைப் பற்றி சரியான புரிதல் நமக்கு அளிக்கப்படவில்லை.
எப்போதுமே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் உறவை வளர்க்க வேண்டும் எனில் முதல் சந்திப்பில் தன்னைப் பற்றிய ஒரு நேர்மறையான எண்ணத்தை அப்பெண்ணிற்கு உருவாக்க வேண்டியது அவசியம். பல்வேறு ஆண்கள் முதன் முதலாக பெண்ணை சந்திக்கும் போது வெளிப்படையாக பேசுவதற்கு மிகவும் பயப்படுகின்றனர். இதன் காரணமாகவே முதல் சந்திப்பானது பலருக்கும் எதிர்மறையான எண்ணத்தை உருவாக்குகிறது. எனவே பெண் தோழியை முதல் சந்திப்பிலேயே கவர்வதற்கு சில முக்கியமான வழிமுறைகளை பற்றி இப்போது பார்ப்போம்..
அவர்களுடைய ஆர்வங்களை தெரிந்து கொள்ள வேண்டும் : எப்போதும் பெண்களிடம் அவர்களுக்கு பிடித்த விஷயங்களைப் பற்றி கேட்டு தெரிந்து கொள்வது உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கும். மேலும் இதன் மூலம் உங்களுக்கிடையே உள்ள தொடர்புகள் அதிகரித்து இருவருக்கும் இடையே உள்ள பொதுவான சில ஆர்வங்களையும் பழக்க வழக்கங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். அதுபோலவே இருவரும் எதிரும் புதிரும் ஆக இருக்கும் சில விஷயங்களைப் பற்றியும் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.
வேறொருவரை போல் நடக்க வேண்டாம் : சில நேரங்களில் ஆண்கள் தங்களுக்கு அனைத்தும் தெரிந்து உள்ளதை போல் பெண்களிடம் நடந்து கொள்வார்கள். இது பெண்களுக்கு சுத்தமாக பிடித்து பிடிக்காத ஒன்று. மேலும் ஆண்கள் வேறு ஒருவரை போல் நடந்து கொள்ள முயற்சி செய்வார்கள். இவை உறவில் விரிசல் ஏற்படுவத்தோடு உங்களைப் பற்றிய எதிர்மறையான பிம்பத்தையும் உருவாக்கும்.
கிடைக்கும்போதெல்லாம் புகழ்ந்து தள்ளுங்கள் : பெண்களைப் புகழ்வதற்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களிடம் உள்ள நல்ல பழக்கவழக்கங்களையும் உங்களுக்கு பிடித்த சில விஷயங்களை பற்றியும் புகழலாம். அதே சமயத்தில் புகழ்ச்சி அதிகமாகாமல் இருத்தலும் முக்கியம்.