உடலுறவின்போது, ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, உடலின் சோர்வு ஏற்படும். ஆனால் ஒரு சிலருக்கு, உடலுறவுக்கு பின், 'தலை'வலி ஏற்படும்! அவ்வாறு தலைவலி ஏற்படுவது இயல்பானது அல்ல. தலைவலி தானே, தூங்கினால் சரி ஆகிடும் என்று அசால்ட்டாக விடக்கூடாது. இது நீங்கள் நினைப்பதுபோல் சாதாரண தலைவலி பிரச்சனையல்ல. இந்த பதிவு உங்களுக்காகத்தான். கவனமாக படித்து காரணத்தை தெரிந்துகொள்ளுங்கள்.
ஆமா ஆமா பாஸ், 'அங்க' வலிக்குதான்னு நாங்க கேக்குறது உங்க 'தலை'யத்தான். பலருக்கு செக்ஸில் ஈடுபடும்போது, குறிப்பாக ஆர்கஸத்தின் போது மிக அரிதாக 'தலை' வலி ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதை செக்ஸ் தலைவலி அப்படின்னு சொல்லுவாங்க. இது அடிப்படை காரணத்தோடு தொடர்புடையது. ஒன்று, செக்ஸின் போது சிலரின் கழுத்து மற்றும் தலையில் ஏற்படும் அழுத்தம் மற்றும் தீவிரத்தன்மை மிதமாக வலி காணப்படும் ; மற்றொன்று ஆர்கஸத்தின்போது திடீரென தலையில் தீவிரமாக, கடுமையாக ஏற்படும் வலியாகும்.
செக்ஸ் தலைவலி ஏன் ஏற்படுகிறது? அதிகப்படியான செயல்பாடு காரணமாவோ, அல்லது தலையில இருக்குற பெயின்-சென்சிடிவ் அமைப்புக் காரணமாவோ, அல்லது இரத்தக்கசிவு அல்லது பக்கவாதம் போன்றவற்றின் அடிப்படை முதல் நிலையின் அறிகுறியாகவோ, அல்லது நாம் உட்கொள்ளும் சில மருந்துகள் கூட இந்த செக்ஸ் தலைவலி ஏற்பட காரணமா இருக்குமாம்.
செக்ஸ் தலைவலிக்கு தீர்வு என்ன? தலை வலிக்குதே! என்றதும் சாதாரண தலை வலியாகத் தான் இருக்கும்னு நீங்களே நினைத்துக்கொண்டு உடனே மருத்துவரின் அறிவுரையின்றி நீங்களாகவே மருந்துகள் உட்கொள்வதோ அல்லது தூங்கினால் சரி ஆகிவிடும், காபி குடித்தால் சரி ஆகிவிடும் என்று நினைத்துக்கொண்டு, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் இருப்பதும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.