Happy Valentine’s Week 2022 : காதலைச் சொல்ல காத்துக்கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் இந்நாள் மிகச்சரியான நாள். இன்று காதலை வெளிப்படுத்தும் தினம். அதாவது proposal day. காதலர் தின கொண்டாட்ட வாரத்தின் இரண்டாவது நாள் ( பிப்ரவரி 8 ) காதலை வெளிப்படுத்தவும், காதலர்கள் காதலில் சில உறுதிமொழிகளை எடுக்கவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. அப்படி நீங்கள் நீண்ட நாட்களாக காதலை வெளிப்படுத்த சரியான நாளுக்காக காத்துக்கொண்டிருக்கிறீர்கள் எனில் இன்றே அதை செய்துவிடுங்கள். தாமதிக்காமல் உடனே காதலை வெளிப்படுத்திவிடுங்கள். உங்களுக்கான சில ஐடியாக்களையும் தொகுத்துள்ளோம். இதில் பிடித்த ஸ்டைலை உங்கள் தனித்துவத்தில் வெளிப்படுத்துங்கள்.
கேண்டில் லைட் டின்னர் : மனதிற்குப் பிடித்தவர்களுடன் கேண்டில் லைட் டின்னர் சாப்பிடுவது என்பது அலாதியான இன்பம்தான். அப்படி உங்களுக்கு பிடித்த துணையுடன் இரவை கழிக்க இது சரியான தருணமாக இருக்கும். இது போன்றதொரு சூழ்நிலையில் உங்கள் காதலை வெளிப்படுத்தும் போது யாருக்குத்தான் காதலை மறுக்க முடியும். கொரோனா காலம் என்பதால் உங்கள் வீட்டிற்கு அழைத்து கூட கேண்டில் லைட் அலங்காரம் செய்து காதலை வெளிப்படுத்தலாம் அல்லது பாதுகாப்பு அம்சங்களை உறுதிபடுத்திக்கொண்டு ரெஸ்டாரண்டுகளில் கொண்டாடலாம். எதுவாயினும் கூட்டத்தை தவிர்ப்பதும் , மாஸ்க் அணிவதும் அவசியம்.
பாட்டு மூலம் காதலை வெளிப்படுத்துதல் : நீங்கள் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவர், பேச தயக்கமாக இருக்கிறது அல்லது அச்சமாக இருக்கிறது எனில் உங்களை காதல் வார்த்தைகளை பாட்டாக வெளிப்படுத்தலாம். நல்ல காதல் பாடல்களை ஒரு கலவையாக தொகுத்து காதலிக்கு அனுப்பிவிடுங்கள். அவர்களை அந்த பாடல்களை கேட்கச் சொல்லுங்கள். அதன் மூலம் அவர் உங்கள் காதலை புரிந்துகொள்ளலாம்.
கவிதை மூலம் காதல் : நம் அன்புக்குரியவரை மகிழ்ச்சிபடுத்த இதைவிட வேறென்ன வேண்டும். அதுவும் நமக்காக மெனக்கெட்டு யோசித்து, வர்ணித்து கவிதை எழுதி கொடுத்தால் அவர்களால் அந்த புரப்போசலை தவிர்க்கவே முடியாது. அப்படி சிறந்ததோர் கவிதையை எழுதி உங்கள் காதலை அழகாக வெளிப்படுத்த இது சரியான யோசனை. உடனே பேப்பர், பேனா எடுங்கள். எழுதுங்கள்...
செல்லப்பிராணிகளின் தூது : இது ராஜாக்கள் கால ஐடியாதான் என்றாலும்.. லேட்டஸ்ட் 2022 ஸ்டைலில் வெளிப்படுத்துங்கள். அவருக்கு செல்லப்பிராணிகள் மிகவும் பிடிக்கும் எனில் இந்த ஐடியா சக்சஸ்தான். அவருக்குப் பிடித்த செல்லப்பிராணி ஒன்றை வாங்கி அதன் கழுத்தில் காதலை சொல்லும் அட்டையை மாட்டிவிட்டு பரிசாக கொடுங்கள். இந்த காதலை அவரால் மறுக்கவோ , மறக்கவோ முடியாது. ஒருவேளை நீங்கள் கொடுப்பது love birds எனில் அட்டை கூட தேவையில்லை... அந்த பறவைகளே உங்கள் காதலை சொல்லாமல் சொல்லிவிடும்.